HomeUncategorizedயாஷிகா ஆனந்த் நடிக்கும் டாஸ் படத்தின் துவக்கவிழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பங்கேற்பு! கோவில்பட்டியில்...

யாஷிகா ஆனந்த் நடிக்கும் டாஸ் படத்தின் துவக்கவிழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பங்கேற்பு! கோவில்பட்டியில் உற்சாகம்.

Published on

யாஷிகா ஆனந்த், விஜய் டிவி யோகி, தேஜா ஸ்ரீ, சஞ்சய் ஷங்கர் உள்ளிட்டோர் நடிக்கும் ‘டாஸ்’ படத்தின் துவக்க விழா கோவில்பட்டியில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினார்.

நிகழ்வில் படத்தை பற்றி பேசிய இயக்குநர் சகு பாண்டியன், ”மர்மமான முறையில் மூன்று கொலைகள் நிகழ்கின்றன. அதன் பின்னணி என்ன, யாஷிகா ஆனந்துக்கும் கொலைகளுக்கும் என்ன தொடர்பு என்பதை சொல்லும் ஒரு கிரைம் திரில்லர் படமாக உருவாக இருக்கிறது. யாஷிகா ஆனந்தும் தெலுங்கு திரையுலகிலிருந்து வந்திருக்கும் தேஜா ஸ்ரீ இன்னொரு நாயகியாகவும் நடிக்கிறார்கள். கோவில்பட்டி, விருதுநகர், சாத்தூர் பகுதிகளில் ஒரே கட்டமாக 25 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். ஊர் மக்களின் ஆதரவும், அன்பும் எங்களை மேலும் ஊக்கப்படுத்துகிறது.

முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம் எல் ஏவுமான திரு.கடம்பூர் C ராஜு அவர்கள் பூஜைக்கு வந்திருந்து எங்கள் குழுவை வாழ்த்தியதோடு, படப்பிடிப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்திருக்கிறார். TOSS என்ற தலைப்பே எளிதில் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுப் பாராட்டினார்” என்றார்.

விரைவில் படப்பிடிப்பை முடித்து இந்த வருட இறுதியில் அல்லது 2026 துவக்கத்தில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

Latest articles

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...

More like this