HomeCinemaரிச்சர்ட் ரிஷி நடிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகும் 'திரெளபதி 2' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகும் ‘திரெளபதி 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Published on

நவராத்திரி கொண்டாட்டம் நாடு முழுவதும் சிறப்பாக நடைபெறும் வேளையில், சினிமா ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு ‘திரெளபதி 2’ காரணமாக அமைந்துள்ளது. மும்பையில் தொடங்கிய படப்பிடிப்பு அரியலூர் ஷெட்யூலுடன் வெற்றிகரமாக முடிந்துள்ளது. விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் அறிவிப்பில் இருந்து முதல் பார்வை போஸ்டர் வரை பிரம்மாண்டமான காட்சிகள் மற்றும் உணர்வுப்பூர்வமான ஹிஸ்டாரிக்கல் ஆக்‌ஷன் கதையாக படம் அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலும் சினிமா வட்டாரத்திலும் எழுந்துள்ளது.

படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து மோகன் ஜி மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டதாவது, “படப்பிடிப்பு பற்றி எவ்வளவு துல்லியமாக இயக்குநர் திட்டமிட்டாலும், தயாரிப்பாளரின் ஆதரவு வலுவாக இருக்கும்போதுதான் படம் சரியாக வரும். இதற்கு தயாரிப்பாளர் சோழ சக்ரவர்த்தி சாருக்கு நன்றி. சினிமா மீதான ஆர்வம், நல்ல படங்களை ஆர்வமுடன் பார்ப்பது, சினிமா உருவாகும் முறையை புரிந்து கொள்வது என எங்களுக்குத் தேவையான அனைத்தை விஷயங்களை செய்து கொடுத்து, முழு சுதந்திரம் அளித்ததோடு, உயர்தரத்தில் படம் வரவேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார்” என்றார்.

தயாரிப்பாளர் சோழ சக்ரவர்த்தி பகிர்ந்து கொண்டதாவது, “தொழில்முனைவராக நான் சினிமாத்துறைக்குள் நுழைந்தாலும் அதன் ஏற்ற இறக்கங்கள் பற்றியும் தெரியும். மோகன் ஜி உடன் பணிபுரிந்தது எனக்கு சிறப்பான அனுபவம். எந்தவொரு குழப்பமோ சந்தேகமோ இல்லாமல் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நிறைவடைந்தது தயாரிப்பாளராக எனக்கு பெருமகிழ்ச்சி. சினிமா மீதான நம்பிக்கையும் இன்னும் அதிகரித்துள்ளது. நடிகர் ரிச்சர்ட் ரிஷி மற்றும் ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி. இவர்கள் கொடுத்த ஆதரவு என்னை இன்னும் அதிக படங்கள் தயாரிக்க ஊக்கமளித்துள்ளது” என்றார்.

தமிழ்- தெலுங்கு என இரு மொழிகளில் ஹிஸ்டாரிக்கல் ஆக்‌ஷன் கதையாக உருவாகியுள்ள ‘திரெளபதி 2’ படத்தை ஜி.எம். ஃபிலிம் கார்பரேஷனுடன் இணைந்து நேதாஜி புரொடக்சன்ஸ், சோழ சக்ரவர்த்தி தயாரித்துள்ளார்.

ரிச்சர்ட் ரிஷியுடன் ரக்‌ஷனா இந்துசுதன், நட்டி நடராஜ், Y.G. மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராஜ் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கெளராங், திவி, தேவயாணி ஷர்மா,  அருணோதயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

14-ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் கதையை பிரம்மாண்ட காட்சிகளுடனும் திறமையான நடிகர்களுடனும் அந்த காலத்திற்கே பார்வையாளர்களை அழைத்து செல்ல இருக்கிறது இந்தத் திரைப்படம்.

போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், டிசம்பர் மாதம் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தின் புரோமோஷன் பணிகளை படக்குழு விரைவில் தொடங்க உள்ளது.

Latest articles

வெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் சுரேஷ். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரின்...

ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு!

  https://www.youtube.com/watch?v=zF5Ug3GpJZ4 பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான...

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது!

இயக்குநர் ஷிவானி செந்தில் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்....

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

More like this