HomeCinemaஎன்னை அங்கீகரித்து தேசிய விருதுவரை உயர்த்திய உங்களின் விழாவில் கலந்து கொள்வது பெருமையாக இருக்கிறது! -தமிழ்த்...

என்னை அங்கீகரித்து தேசிய விருதுவரை உயர்த்திய உங்களின் விழாவில் கலந்து கொள்வது பெருமையாக இருக்கிறது! -தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழாவில் ‘பார்க்கிங்’ படத்தின் இயக்குநர் ராம்குமார் பேச்சு

Published on

தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது.

சிறப்பு விருந்தினர்களாக நடிகை சிம்ரன், மூன்று தேசிய விருதுகள் பெற்ற பார்க்கிங்’ படத்தின் இயக்குநர் ராம்குமார் கலந்துகொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் ரெயின் கோட் வழங்கிச் சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் சங்கத்தின் செயலாளர் கோடங்கி ஆபிரகாம் வரவேற்புரை வழங்கினார். தலைவர் கவிதா சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்த விவரங்களைத் தெரிவித்து, இதுவரையில் சங்கத்திற்கு உதவிய திரைப் பிரபலங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

நிகழ்வில் பேசிய இயக்குநர் ராம்குமார், ”இந்த மேடை எனக்கு மிகவும் சிறப்பான மேடை. மனதுக்கு நெருக்கமான மேடை. முதன்முதலில் ‘பார்க்கிங்’ திரைப்படத்தை இங்கே திரையிட்டு பத்திரிகையாளர்கள் முன்பு பாராட்டு பெற்றேன். அதே மேடையில் தற்போது தேசிய விருது பெற்று அந்த மகிழ்ச்சியுடன் பத்திரிகையாளர்கள் முன்பு அங்கீகாரம் பெறும்போது இன்னும் சந்தோஷமாக இருக்கிறது. அன்று நீங்கள் கொடுத்த அங்கீகாரம் தான் இன்று என்னை தேசிய விருதுவரை உயர்த்தி இருக்கிறது. என் முதல் பார்வையாளர்கள் நீங்கள் தான். உங்கள் முன்பு இந்த இடத்தில் வந்து நிற்பது எனக்கு பெருமையாக இருக்கிறது” என்றார்.

நடிகை சிம்ரன் பேசியபோது, ”30 வருடங்களாக இந்த சினிமாவில் நிலைத்து நிற்க பத்திரிகையாளர்களாகிய நீங்கள் கொடுத்த ஆதரவு தான் காரணம். இன்று ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தின் நூறாவது நாள். இந்த விழாவை இங்கே உங்களுடன் கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு எல்லா விதத்திலும் நீங்கள் ஆதரவாக இருந்திருக்கிறீர்கள். அதேபோல் என்னால் முடிந்த ஆதரவுகளையும் நான் எப்போதும் கொடுக்கத் தவற மாட்டேன்” என்றார்.

இயக்கிய முதல் படத்திலேயே 3 தேசிய விருதுகளை பெற்றபின் இயக்குநர் ராம்குமார் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இது.

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் நூறாவது நாளை எட்டியதையடுத்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

சங்க உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டபின் விழா நிறைவடைந்தது.

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this