HomeCinemaதென்னிந்திய ஊடகங்களில் பணியாற்றும் திறமையானவர்களுக்கு TNIT 2025 விருதுகள் வழங்கும் விழா ஆகஸ்ட் 23-ல் பெங்களூரில்...

தென்னிந்திய ஊடகங்களில் பணியாற்றும் திறமையானவர்களுக்கு TNIT 2025 விருதுகள் வழங்கும் விழா ஆகஸ்ட் 23-ல் பெங்களூரில் நடக்கவிருக்கிறது!

Published on

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23-ம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது. AR Group இதனை வழங்குகிறது.

இந்த விருது விழாவில் தென்னிந்தியா முழுவதும் செய்தி ஊடகங்களில் பணியாற்றும் திறமையான ஊடக நண்பர்களுக்கான நியூ இந்தியன் டைம்ஸ் மீடியா விருதுகள், சிறந்த தொகுப்பாளர் | சிறந்த நிருபர் | சிறந்த வீடியோ எடிட்டர் | சிறந்த வீடியோ கேமராமேன் | சிறந்த நகல் எடிட்டர் | சிறந்த குரல் ஓவர் கலைஞர் | சிறப்பு பிரிவு ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளது.

TNIT குழுமத்தின் CEO ரகுபட் இந்த விருது விழாவை நடத்துகிறார். முன்னதாக இந்த விழா பற்றி மீடியா நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக TNIT சார்பில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

நடிகர் சரவணன், நாகேதிர பிரசாத், மீடியாவிலிருந்து கௌஷிக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று விருது விழா குறித்து பத்திரிகை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

நடிகர் சரவணன்: திரைத்துறையில் நடிகர், இயக்குநர், கேமராமேன், எடிட்டர் என எல்லோருக்கும் விருது வழங்குவதைப் பார்த்துள்ளேன் ஆனால் முதல் முறையாக ஊடக நண்பர்களுக்கு விருதுகள் வழங்குகிறார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தது. இதை நடத்தும் ரகுபட் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். இந்த விழா தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் நன்றி.

நடன கலைஞர் நாகேந்திர பிரசாத்:
ஊடக துறையில் இருப்பவர்களுக்கு இவ்வளவு பெரிய விருதுகள் வழங்குவதை இப்போது தான் பார்க்கிறேன். இன்றைய காலகட்டத்தில் ஊக்கம் என்பது மிக முக்கியம் அதை செயல்படுத்தும் ரகுபட் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். ரகுபட் அவர்களை எனக்கு நெருக்கமாக தெரியும் அவர் எந்தவித பிரதிபலனும் இல்லாமல் இதைச் செய்கிறார். இது இன்னும் ஆயிரம் வருடம் தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன் நன்றி.

ஜூரி மெம்பர் மற்றும் பத்திரிக்கையாளர் கௌஷிக்:
முதன் முதலாக இந்த விருது பற்றி ரகுபட் சொன்ன போது, மிகவும் சந்தோசமாகவும் பெருமையாகவும் இருந்தது. மீடியா உலகில் அனைவரும் எந்தளவு கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களுக்கு இது மிகச்சிறப்பான அங்கீகாரமாக இருக்கும். இது 8 வது வருடம், இது போல இன்னும் பல வருடங்களுக்கு இந்த விழா நடக்க வேண்டும் வாழ்த்துக்கள்.

TNIT குழுமத்தின் CEO ரகுபட்:
மீடியா உலக நண்பர்களுக்கான அங்கீகாரம் இது. இது எட்டாவது வருடமாக நடக்கிறது. முதலில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா தொடர்ந்து இப்போது இங்கு நடத்துகிறோம். அடுத்து கேரளவிலும் நடத்த திட்டமிட்டுள்ளோம். மீடியா நண்பர்கள் எப்போதும் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல், மக்களுக்காக கடுமையாக உழைக்கிறார்கள், அவர்களை கௌரவபடுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். இந்த விழாவிற்கு வருகை தந்து ஆதரவளித்த, நடிகர் சரவணன், நாகேதிர பிரசாத், கௌஷிக் ஆகியோருக்கு நன்றி.

Latest articles

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

மணிரத்னம் சார் பள்ளியில் கற்ற அனுபவங்கள் இந்தப் படத்தை உருவாக்க மிகவும் உதவியாக இருந்தது! -‘அன்பே டயானா’ பட விழாவில் இயக்குநர் பாரி இளவழகன் 

ஜமா பட இயக்குநர் பாரி இளவழகன் நடித்துள்ள ‘அன்பே டயானா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் மற்றும்...

I, Nobody சினிமா விமர்சனம்

'கெட்டியோலானு என்டே மாலாக்கா', 'ரோஷாக்' ஆகிய படங்களை இயக்கிய நிசாம் பஷீர் இயக்கியுள்ள படம். வங்கி கொள்ளை என்ற...

புத்துணர்ச்சியும் பாஸிடிவ் உணர்வுகளும் நிரம்பிய துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என பெயரிடப்பட்டுள்ளது…...

More like this

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

மணிரத்னம் சார் பள்ளியில் கற்ற அனுபவங்கள் இந்தப் படத்தை உருவாக்க மிகவும் உதவியாக இருந்தது! -‘அன்பே டயானா’ பட விழாவில் இயக்குநர் பாரி இளவழகன் 

ஜமா பட இயக்குநர் பாரி இளவழகன் நடித்துள்ள ‘அன்பே டயானா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் மற்றும்...

I, Nobody சினிமா விமர்சனம்

'கெட்டியோலானு என்டே மாலாக்கா', 'ரோஷாக்' ஆகிய படங்களை இயக்கிய நிசாம் பஷீர் இயக்கியுள்ள படம். வங்கி கொள்ளை என்ற...