HomeCinemaராஷ்மிகா மந்தனா – தீக்ஷித் ஷெட்டி நடிக்கும் 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல் 'நதிவே'...

ராஷ்மிகா மந்தனா – தீக்ஷித் ஷெட்டி நடிக்கும் ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ படத்தின் முதல் பாடல் ‘நதிவே’ வெளியானது!

Published on

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் தீக்ஷித் ஷெட்டி ஜோடியாக நடிக்கும் ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ திரைப்படம், கீதா ஆர்ட்ஸ் மற்றும் தீராஜ் மோகிலினேனி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகி வருகிறது. புகழ்பெற்ற தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் இப்படத்தினை வழங்குகிறார். இயக்கும் பணியை நடிகராகவும், இப்போது இயக்குநராகவும் செயல்படும் ராகுல் ரவீந்திரன் மேற்கொள்கிறார்.

முழுமையான காதல் படைப்பாக உருவாகி வரும் இப்படத்திலிருந்து முதல் இசை வெளியீடாக “நதிவே” எனும் பாடல் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.

ஹேஷம் அப்துல் வாஹாப் இசையமைத்துள்ள இந்த பாடல், மனதைக் கொள்ளை கொள்ளும் இசையும், ஈர்க்கும் குரலும் கொண்ட ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாக உள்ளது. தமிழ் பாடல்வரிகளைக் கவிஞர் ராகேந்து மௌலி எழுதியுள்ளார். அவருடைய வரிகள், இசையுடன் நெருக்கமாக இணைந்து, காதல் உணர்வுகளை ஆழமாகப் பிரதிபலிக்கின்றது.

ராஷ்மிகா மந்தனா மற்றும் தீக்ஷித் ஷெட்டி இடையிலான வசீகரிக்கும் கெமிஸ்ட்ரி பாடலின் வசீகரத்திற்கு மேலும் மெருகூட்டுகிறது. விஸ்வகிரண் நம்பி நடன அமைப்பில், நேர்த்தியான நடன அசைவுகள், ராஷ்மிகாவின் அழகான முகபாவங்கள் மற்றும் தீக்ஷித்தின் அழகான நடிப்பு ஆகியவை உணர்ச்சிப்பூர்வமான ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. இசை, பாடல் வரிகள் மற்றும் காட்சிகள் ஒன்றாக இணைந்து ஒரு ஆழமான, நெகிழ்ச்சியுடன் கூடிய மயக்கும் அனுபவத்தை உருவாக்குகின்றன.

தற்போது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

Latest articles

கோந்தல் சினிமா விமர்சனம்

மராத்தி மக்களின் சாஸ்திர சம்பிரதாயங்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு, ஒரு இரவில் நடக்கும் கதையாக, அசத்தலான திரில்லராக்கியிருக்கிறார் இயக்குநர்...

ஃபிளாக் சினிமா விமர்சனம்

தாத்தாவின் கனவை தன் கனவாக்கிக் கொண்டு இந்தியா முழுக்க சுற்றும் சிறுவன். அப்படியென்ன தாத்தாவின் கனவு? டெல்லியில் ஜனாதிபதி தேசியக் கொடியேற்றும்போது...

ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் – கல்ட் டிஜிட்டல் – பனோரமா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ‘கூடு’ விரைவில் ரிலீஸ்!

ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் ( Skymoon Entertainment ) மற்றும் கல்ட் டிஜிட்டல் (Cult Digital) நிறுவனங்களுடன் இணைந்து பனோரமா...

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கலந்துரையாடல் கூட்டம்!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. ஜி.கே.எம். தமிழ்க்குமரன் அவர்கள் தலைமையில், சங்கத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினர்களான...

More like this