HomeCinemaவித்தியாசமான கதைக்களத்தில் இலங்கைத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட தீப்பந்தம் படத்தின் சிறப்புத் திரையிடலில் இயக்குநர் வ கெளதமன்...

வித்தியாசமான கதைக்களத்தில் இலங்கைத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட தீப்பந்தம் படத்தின் சிறப்புத் திரையிடலில் இயக்குநர் வ கெளதமன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பங்கேற்பு… பாராட்டு மழையில் நனைந்த படக்குழு!

Published on

இலங்கைத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட ‘தீப்பந்தம்’ திரைப்படம் கடந்த மே 31-ம் தேதி இலங்கை முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அதையடுத்து, அந்த படம் சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் தமித் திரையுலகப் பிரமுகர்கள், பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்காக திரையிடப்பட்டது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் வ.கௌதமன், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், ஓவியர் மருது, ஓவியர் புகழேந்தி, இயக்குநர்கள் கவிதா பாரதி, ராசி அழகப்பன், நடிகர் முத்துக்காளை, இயக்குநர்கள் கேந்திரன் முனியசாமி,
அஜயன் பாலா, மாணவர்கள் நகலகம் சவுரி ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு, படத்தைப் பார்த்து தங்கள் கருத்துக்களை குறிப்பிட்டு படக்குழுவினரை பாராட்டிப் பேசினார்கள்.

நிகழ்வில் பேசிய இயக்குநர் ராஜ்சிவராஜ், ”ஐம்பதுகளில் பிறந்த ஒருவரின் வாழ்க்கைப் பயணத்தை மையமாக கொண்டு இந்த படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. அவர் வாழ்க்கை வழியாக தமிழர் உரிமைப் போராட்டங்கள், செயல்பாடுகள் ஆகியனவற்றையும் அதற்கான மூல காரணங்களையும் வெளிப்படுத்தும் வண்ணம் திரைக்கதை அமைத்து, ஓர் உணர்வுப்பூர்வமான வாழ்வை ஆவணப்படுத்தியுள்ளோம். அதை திரைப்படங்களுக்கே உரிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலந்து கொடுத்திருக்கிறோம். பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இந்த படம் ஒவ்வொரு வகையில் நெருக்கம் கொடுக்கும் படைப்பாக இருக்கும். பாருங்கள்” என்றார்.

படம் பற்றி… ராஜ் சிவராஜ் இயக்கத்தில், தமிழருவி சிவகுமார், ஏழுமலைப்பிள்ளை
மதிசுதா, கில்மன், கஜன் தாஸ், ஆகாஷ், நஜாத்.கே, எல்,பிரகாஷ், கஜன் விஜயநாதன், கதிர்சினி, சபேசன், ஆர்.கே.கஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அம்லுஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, ப்ளக்போர்ட் இன்டர்நேசனல் நிறுவனம் வழங்குகிறது.

படத்தின் கதையை பூவன் மதீசன் எழுதியிருக்கிறார். ராஜ் சிவராஜ், பூவன் மதீசன், அருண் யோகதாசன் ஆகியோர் திரைக்கதை அமைத்துள்ளனர்.

அம்லுஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, ப்ளக்போர்ட் இன்டர்நேசனல் நிறுவனம் வழங்குகிறது.

ஏ.கே.கமல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பூவன் மதீசன் இசை அமைத்துள்ளார்.
பாடல்களை வேலணையூர் சுரேஷ், கே.எஸ்.சாந்தகுமார், பூவன் மதீசன், அருண் யோகதாசன் ஆகியோர் எழுதியுள்ளனர். படத்தொகுப்பை அருண் யோகதாசனும், கலை இயக்கத்தை வி.எஸ்.சிந்துவும் கையாண்டுள்ளனர். மக்கள் தொடர்பு பணிகளை கோவிந்தராஜ் கவனிக்கிறார்.

Latest articles

கொண்டாட்டமாய் நடந்த, கவின் நடிக்கும் ‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்தின் தொடக்க விழா!

கவின் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'பேர் சொல்லும் பிள்ளை' படத்தின் பாரம்பரிய படப்பிடிப்பு தொடக்க விழா...

அங்கீகாரம் திரைப்படம் ஒரு பார்வை

'அங்கீகாரம்' திரைப்படம் சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வாதாரப் போராட்டத்தை மிக எதார்த்தமாகப் பேசுகிறது. துப்புரவுத் தொழிலாளியாக வரும் தாய் மற்றும்...

உற்சாகமாய் நடந்த, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ரச்சிதா மகாலக்ஷ்மி நடிக்கும்  ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’  படத்தின் துவக்க விழா!

யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ரச்சிதா மகாலக்ஷ்மி, யாஷிகா ஆனந்த் நடிப்பில், கே.ஆர். செந்தில்நாதன் எழுதி இயக்கும் ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ்...

கிராமத்து மக்கள் வெளியிட்ட ‘என்ன விலை’ திரைப்படத்தின் முதல் பார்வை!

இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களின் முதல் பார்வையை பெரும்பாலும் பிரபலங்களோ அல்லது டிஜிட்டல் தளங்களிலோ வெளியிடுகின்றனர். ஆனால், இதற்கு மாறாக...

More like this