ஜெயகாந்தன் ரெங்கசாமி இயக்கத்தில், உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டு 10 நாட்களில் எடுக்கப்பட்ட ‘திருப்பூர் குருவி’ திரைப்படம் மே 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அறிமுக நடிகர்கள் கே.எம்.ஆர், விஜயன், சரவணன், ரஞ்சன் ஆகியோர் நாயகர்களாக நடிக்க, தர்ஷினி, திருக்குறளி, இந்து, சுபிக்ஷா நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். வில்லனாக பிரியராஜா நடிக்க, முக்கியமான வேடத்தில் ‘அருவா சண்ட’ பட நாயகன் இசக்கி ராஜா நடித்திருக்கிறார்.
வி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜெ.விஜயன் மற்றும் கே.எம்.ஆர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜெ.கதிர் இசையமைக்க, அரக்கோணம் யுவா ஒளிப்பதிவு செய்திருக்கிக்றார். பிரியன் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். ஜி.கே.செல்வமணி தமிழகம் முழுவதும் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுகிறார். மக்கள் தொடர்பாளராக விஜய் கார்த்திக் பணியாற்றுகிறார்.