HomeCinemaநாம் தினமும் சந்திக்கும் ஒரு விஷயத்தைதான் இந்தப் படம் பேசுகிறது! -'ட்ராமா' படத்தின் இசை வெளியீட்டு...

நாம் தினமும் சந்திக்கும் ஒரு விஷயத்தைதான் இந்தப் படம் பேசுகிறது! -‘ட்ராமா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழக சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் விஜயதாரிணி பேச்சு

Published on

விவேக் பிரசன்னா முதன்மை பாத்திரத்தில் நடிக்க, அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கியுள்ள ‘ட்ராமா’ திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடந்தது. இயக்குநர் கே. பாக்யராஜ், நடிகர் ‘டத்தோ’ ராதாரவி, தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன், ”வாய்ப்புகள் தேடி பல தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி இருக்கிறேன். வாய்ப்பு கிடைக்காததால் என்னுடைய நண்பர்களின் ஆதரவுடன் இப்படத்தின் பணியை தொடங்கினேன். அவர்கள் தங்களது பெயரை வெளிப்படுத்த கூடாது என்று கட்டளையிட்டதால் தயாரிப்பாளராக என்னுடைய மனைவியின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படத்தை பைலட் மூவியாகத் தான் முதலில் தொடங்கினோம். அது சிறப்பாக வந்தவுடன் திரைப்படமாக உருவாகி இருக்கிறது” என்றார்.

நடிகர் விவேக் பிரசன்னா, ”இந்த திரைப்படம் நிறைய கலைஞர்களுக்கு முதல் படம். அவர்களுக்கு இந்த மேடை முக்கியமானது. இயக்குநர் தம்பிதுரைக்கு சினிமா மீது இருக்கும் தீவிரமான காதலால் அவர் வேலைக்கு சென்று கொண்டே இப்படத்தின் அனைத்து பணிகளையும் செய்தார். அவருக்காக படத்தில் பணியாற்றிய அனைவரும் பெரிய ஒத்துழைப்பை வழங்கினார்கள் . அவர் தன்னுடைய சக்திக்கு மீறி உழைப்பை கொடுத்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார். இப்படத்தை வெளியிடுவதற்கு உதவி செய்து வரும் இளமாறனுக்கு நன்றி.

கடந்த 20 நாட்களாக இப்படத்தினை மக்களிடம் சேர்ப்பதற்காக தொடர்ந்து விளம்பர பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். தம்பிதுரை போன்ற திறமையான இயக்குநர்கள் தொடர்ந்து படங்களை இயக்க வேண்டும். அவர் இன்னும் உயரங்களை தொட வேண்டும். அதற்கு இந்த ட்ராமா படத்தின் வெற்றி அவசியம் . இதற்கு ரசிகர்களின் ஆதரவு தேவை என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகை சாந்தினி தமிழரசன், ”தம்பிதுரை மாரியப்பன் திறமையான இயக்குநர். இந்த படத்திற்கான கான்செப்ட் மிகவும் பெருந்தன்மையானதாக இருந்தது. அவரிடம் கதையைக் கேட்ட பிறகு அவர் ஒரு வீடியோவை காண்பித்தார். அதுவும் சிறப்பாக இருந்தது. படம் இன்ட்ரஸ்டிங்கான கான்செப்ட் என்பதால் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

விஜயதாரணி, ”நாம் தினமும் சந்திக்கும் ஒரு விஷயத்தை தான் இந்தப் படம் பேசுகிறது. நான் இன்னும் இந்த படத்தை பார்க்கவில்லை. நிச்சயமாக நன்றாக இருக்கும் என நம்புகிறேன்.

இப்படத்தின் பாடல்கள் சிறப்பாக இருக்கின்றன. இதற்காக இசையமைப்பாளருக்கு வாழ்த்துகள். ஒரு பாடல் கூட சோடை போகாது. இந்த படத்திற்காக இரண்டு பாடல்களை பாடலாசிரியர் மகேஷ் பாலகிருஷ்ணன் எழுதியிருக்கிறார், அவர் என் உறவினர் தான். தற்போது இல்லை, இளம் வயதிலேயே இறைவனடி சேர்ந்து விட்டார். அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய பாடலாசிரியராக வேண்டும் என விரும்பி இருந்தார். இந்தப் படத்தின் தொடக்க கட்ட பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். அவர் எழுதிய இரண்டு பாடல்களும் ஹிட் ஆகும் என்பது என் நம்பிக்கை. பாடல்கள் மட்டுமல்ல படமும் நிச்சயம் பெரிய வெற்றியைப் பெறும்” என்றார்.

Latest articles

18-ம் ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வில் திரைக் கலைஞர்களுடன் TVK தலைவர் வேல்முருகன் பங்கேற்று உற்சாகம்!

திரைக்கலைஞர்களின் உழைப்பிற்கு ரசிகர்களின் பாராட்டுகள் ஊக்கம் தருவது போல, அவர்களுக்கு அங்கீகாரம் தருவது விருதுகள் தான். அப்படியான திறமையான...

இந்தப் படத்தில் சத்யாவுக்கும் விஜிக்கும் இடையேயான லவ் ஸோல்ஃபுல்லாக இருக்கும்! -’29’ பட விழாவில் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேச்சு

'மேயாதமான்', 'ஆடை', 'குலுகுலு' படங்களுக்குப் பிறகு ரத்னகுமார் இயக்கும் '29' படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ்,...

தாதாசாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை வென்ற ‘தி வைல்ட் கால்.’

ஆட்லர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், நவீத் எஸ் ஃபரீத் மற்றும் அசாருதீன் சுலைமான் இயக்கத்தில் உருவான படம் ‘தி வைல்ட்...

ரிவர் ரூட் ஸ்டுடியோஸ் & ரெட் ராக் ஸ்டுடியோஸ் இணையும் ‘பிரௌன் மணி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

River Route Studios மற்றும் Red Rock Studios இணைந்து தயாரிக்கும் முதல் கூட்டுத் திரைப்படமான Brown Mani...

More like this