HomeCinemaநிவேதா தாமஸ் முதன்மை பாத்திரத்தில் நடித்த '35 சின்ன விஷயம் இல்ல' SUN NXT-ல் ஸ்ட்ரீமாகிறது.

நிவேதா தாமஸ் முதன்மை பாத்திரத்தில் நடித்த ’35 சின்ன விஷயம் இல்ல’ SUN NXT-ல் ஸ்ட்ரீமாகிறது.

Published on

நிவேதா தாமஸ் முதன்மை பாத்திரத்தில் நடித்த ’35 சின்ன விஷயம் இல்ல’ என்ற திரைப்படம் ரசிகர்களை கவர்ந்த மிகுந்த தாக்கமுள்ள குடும்பக் கதை. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இப்படம் தற்போது தமிழின் முன்னணி ஓடிடி தளமான SUN NXT-ல் ஸ்ட்ரீமாகிறது.

ஒரு நடுத்தர குடும்பத்து இளம் தாய் தனது மகன் படிப்பில் திணறுகையில், அவனை பாஸ் மார்க்கான 35 மதிப்பெண்களைப் பெற வைக்க முயற்சிக்கிறாள். இது வீட்டின் இயல்பான வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிறது. அந்த குடும்பம் சந்திக்கும் சவால்களும், அதைத் தீர்க்க அவர்கள் போராடுவதும், வெகு சுவாரஸ்யமான திரைக்கதையால் சொல்லப்பட்டுள்ளது. எளிய நடுத்தர வர்க்கம் தங்கள் வாழ்க்கையைத் திரையில் பார்க்கும்படி ஒரு அசத்தலான ஃபேமிலி டிராமாவாக உருவாகியிருந்த இப்படம் திரையரங்குகள் மற்றும் விமர்சகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

நடிகை நிவேதா தாமஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் பிரியதர்ஷி, விஸ்வதேவ் ரச்சகொண்டா, கௌதமி, பாக்யராஜ், கிருஷ்ண தேஜா, அருண் தேவ், அபய், அனன்யா ஆகியோர் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்களைக் குவித்த இப்படத்தின் ஓடிடி வெளியீடுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இப்போது அது நிறைவேறியுள்ளது.

Latest articles

கோகினூர் வைரத்தின் வரலாற்றுப் பதிவுகளை வைத்து உருவான கோகினூர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு! படத்தொகுப்பு, பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் விறுவிறுப்பு.

எஸ்.பி.ஜி சினிமாஸ் சார்பில் ராஜம் இ.கஜேந்திரா தயாரித்து இயக்கியுள்ள படம் 'கோகினூர்.' படத்தின் கதை வைரங்களின் ராணியாக திகழும் கோகினூர்...

வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், டிஜிட்டல் திரை நட்சத்திரமும், 'டிராகன்'...

கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=65mrBBZbSbo கார்த்தி கதாநாயகனாக, இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். லக்ஷ்மண் குமார் மற்றும்...

பகுத்தறிவையும் பேண்டஸியையும் கலந்த க்ரைம் டிராமா ‘பீப்’ செப்டம்பரில் ரிலீஸ்!

‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இல.சண்முகசுந்தர் கதை எழுதி இயக்கியுள்ள படம் ‘பீப்.’ எம் குவெஸ்ட்...

More like this