Tuesday, December 16, 2025
spot_img
HomeCinemaநாக சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் தண்டேல் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியீடு!

நாக சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் தண்டேல் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியீடு!

Published on

நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் சந்து மொண்டேடி இயக்கியிருக்கும் ‘தண்டேல்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ், பன்னி வாஸ் தயாரித்து அல்லு அரவிந்த் வழங்கும், இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் நடந்து வருகிறது. படம் பிப்ரவரி 7-ம் தேதி வெளியாகிறது.

ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும், இந்தப்படத்தின் முதல் சிங்கிள் ‘புஜ்ஜி தல்லி’ ஒரு பரபரப்பான ஹிட் ஆனது. இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது சிங்கிள் ‘நமோ நம சிவாய’ பாடல் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சிவசக்தி பாடல், நடனம், பக்தி மற்றும் கம்பீரத்தை ஒரு இணையற்ற ஆடியோ விஷுவல் அனுபவமாகக் கலந்து தந்து, ஒரு தலைசிறந்த படைப்பாக மஹாதேவனின் மகிமையைப் போற்றுகிறது. இந்தப் பாடலானது ஒரு தெய்வீகத் தன்மையுடன், நம்முள் ஒரு ஆன்மீக உணர்வைத் தூண்டுகிறது. பார்வையாளர்களைப் பயபக்தியுடன் கூடிய பிரமிப்பைத் தருகிறது.

ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், மனதை உருக்கும் இசையில், ஆன்மாவைக் கிளறி, கேட்பவருக்குள் நெருப்பை மூட்டுகின்றது. இந்தப் பாடல், நம் உணர்வோடு கலந்து, உடல் முழுவதும் எதிரொலிக்கிறது, மனதுக்குள் மகிழ்ச்சி மற்றும் பக்தியை உருவாக்குகிறது. இப்பாடல் பாரம்பரிய ஒலிகளை நவீன இசையுடன் தடையின்றி கலக்கிறது. ஜோனவித்துலா எழுதிய பாடல் வரிகள், சிவனின் சர்வ வல்லமை மற்றும் மாயத்தன்மையின் சாரத்தைக் கச்சிதமாகப் படம்பிடித்துள்ளன, அதே சமயம் மகாலிங்கம் மற்றும் ஹரிப்ரியா தங்களது ஆத்மார்த்தமான குரல்களால் அசத்தியுள்ளனர்.

முன்னதாக லவ் ஸ்டோரி படத்தில் அட்டகாசமான கெமிஸ்ட்ரி மூலம், ரசிகர்களைக் கவர்ந்த முன்னணி ஜோடியான நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி, இந்த பாடலில் மிக எளிதாக நம்மை மயக்குகிறார்கள். நாக சைதன்யாவின் நேர்த்தியான மற்றும் சக்திவாய்ந்த நடிப்பு, சாய் பல்லவியின் நளினம் மற்றும் வசீகரிக்கும் பாவனைகள் நம்மை ஈர்க்கிறது.

பாடலில் சேகர் மாஸ்டரின் நடன அமைப்பு மற்றொரு சிறப்பம்சமாகும், இந்த நடன அமைப்பு, பாடலை மறக்க முடியாத அனுபவமாக மாற்றுகிறது. மிக அழகான நடன அமைப்பு, பின்னணி அரங்குகள் என அனைத்தும் , சிவபெருமானுக்கு ஒரு புனிதமான அர்ப்பணிப்பாக அமைந்துள்ளது.

மொத்தத்தில், நமோ நம சிவாய பாடல், கலை மற்றும் ஆன்மீக இணைப்பின் மூலம் சிவபெருமானின் மகிமையைக் கொண்டாடுகிறது. இந்த பாடல் வரும் ஆண்டுகளில் மிகப்பெரிய சார்ட்பஸ்டர்களில் ஒன்றாக மாறும்.

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஷாம்தத் ஒளிப்பதிவு செய்துள்ளார், தேசிய விருது பெற்ற நவீன் நூலி எடிட்டராக பணியாற்றியுள்ளார், ஸ்ரீநாகேந்திர தங்காலா கலை இயக்கம் செய்துள்ளார்.

படக் குழு:
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு : ஷாம்தத்
எடிட்டர்: நவீன் நூலி
கலை: ஸ்ரீநாகேந்திரன் தாங்கலா
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ
மக்கள் தொடர்பு : யுவராஜ்

 

Latest articles

திரைக்குரல் First frame- 2025 குறும்பட போட்டி வெற்றியாளர்களுக்கு விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

திரைக்குரல் First frame- 2025 குறும்பட போட்டியின் விருது வழங்கும் விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கத்தில் சிறப்பாக...

‘ரொக்க புலி’யும் ‘பாண்டி’யும் கனமான கதாபாத்திரமாக இருக்கும் இந்த சீரியஸான கதையில் எப்படி காமெடியை சேர்த்ததுதான் எனக்கான சவால்! -‘கொம்பு சீவி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 

'சுப்ரீம் ஸ்டார்' சரத்குமார், 'இளைய கேப்டன்' சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து நடிக்கும் 'கொம்பு சீவி' திரைப்படத்தின் இசை...

பல் டாக்டருடன் பலான நட்பு… கணவருக்கு தெரிந்து விபரீதம்… கிளுகிளுப்பும் விறுவிறுப்பும் கலந்துகட்டிய ரகசிய சினேகிதனே’ டிசம்பர் 26-ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது!

சேகர் கன்னியப்பன் இயக்கத்தில் வேல்முருகன், ஸ்வேதா ஸ்ரீம்டன் நடித்துள்ள படம் 'ரகசிய சினேகிதனே.' சென்னையில் கணவன் சந்தோஷுடன் வசிக்கும் சந்தியாவுக்கு...

More like this

திரைக்குரல் First frame- 2025 குறும்பட போட்டி வெற்றியாளர்களுக்கு விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

திரைக்குரல் First frame- 2025 குறும்பட போட்டியின் விருது வழங்கும் விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கத்தில் சிறப்பாக...

‘ரொக்க புலி’யும் ‘பாண்டி’யும் கனமான கதாபாத்திரமாக இருக்கும் இந்த சீரியஸான கதையில் எப்படி காமெடியை சேர்த்ததுதான் எனக்கான சவால்! -‘கொம்பு சீவி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 

'சுப்ரீம் ஸ்டார்' சரத்குமார், 'இளைய கேப்டன்' சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து நடிக்கும் 'கொம்பு சீவி' திரைப்படத்தின் இசை...
error: Content is protected !!