HomeCinema'திருக்குறள்' படத்திற்கு பாடல்கள் எழுதி இசையமைக்கும் இசைஞானி இளையராஜா!

‘திருக்குறள்’ படத்திற்கு பாடல்கள் எழுதி இசையமைக்கும் இசைஞானி இளையராஜா!

Published on

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது மிகப் பிரமாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. வி.ஐ.டி.வேந்தர் கோ.விஸ்வநாதன் தலைமையிலான தமிழியக்கமும் இப்பணியில் இணைந்துள்ளது.

காமராஜ் படத்தை இயக்கிய ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

அறம் சார் வாழ்வியலை மானுடர்க்கு போதிப்பதில் உலகில் முன்னிலை வகிக்கும் நூல் திருக்குறள். திருக்குறளின் முப்பாலை மையக் கருவாகக் கொண்டு, இப்படத்திற்கான திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.

படைப்பினூடாக படைப்பாளியைக் கண்டடையும் முயற்சியில் திருவள்ளுவரும் இப்படத்தில் ஒரு பாத்திரமாக வருகிறார். கூடவே வாசுகியும், அதோடு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வாழ்வியலும் இத்திரைப்படத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது.

காதலோடு, வீரமும் தமிழர் வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாகும். அன்றைய தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் போர்க்களக் காட்சிகளும் மிகுந்த பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளன.

இந்த படத்தைப் பார்த்த இசைஞானி இளையராஜா, உடனடியாக இசையமைக்க இசைவு தெரிவித்தார். அத்துடன் இப்படத்திற்காக, சங்க இலக்கியச் சொற்களோடு, கவித்துவமும், பொருட்செறிவும் மிக்க இரு பாடல்களையும் எழுதியுள்ளார்.
முத்தமிழில், முதல் தமிழுக்கான உயரிய படைப்பிற்கு, இரண்டாம் தமிழின் அரியணையில் வீற்றிருக்கும் இசைஞானி இசையமைப்பது, இத்தனை ஆண்டுகால தமிழுக்கான வரலாற்றில் ஒரு அற்புத நிகழ்வாகும்.

ஜி.யூ.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பின்பு தான், திருக்குறள் உலக அளவில் அறிஞர்களின் கவனத்தை ஈர்த்தது. அதுபோல் இந்நிகழ்விற்குப் பின் சர்வதேச அளவில் உலக மக்களின் கவனத்தையும் நிச்சயம் இந்த திருக்குறள் படம் ஈர்க்கும்.

படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோரோடு, குணாபாபு, பாடினி குமார் மற்றும் முக்கிய நடிக, நடிகையர் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கலை இயக்குநராக சுரேஷ் கலேரியும், ஆடைவடிவமைப்பாளராக சுரேஷ் குமாரும் பணியாற்றியுள்ளனர். செம்பூர்.கே.ஜெயராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுத எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். மதுரை டி.பி.ராஜேந்திரன் முதன்மைப் பங்களிப்புச் செய்துள்ளார்.

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this