HomeMovie Reviewஸ்வீட்டி நாட்டி கிரேசி சினிமா விமர்சனம்

ஸ்வீட்டி நாட்டி கிரேசி சினிமா விமர்சனம்

Published on

காமம் காமெடி இரண்டின் கலவையாக ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி.’

கதாநாயகனை ஒரு டியூசன் டீச்சர் வளைத்துப் பிடித்து தன் உடற்பசியைத் தீர்த்துக் கொள்கிறார். அப்படி இந்த படத்தின் ஆரம்பமே அமர்க்களம்.

அதன் பின் அவன் ஒரு ஆன்ட்டியுடன் அப்படி இப்படியுமாக இருந்து விடுகிறான். அவனாக வேண்டி விரும்பி எதையும் செய்யவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலையால் நடக்கிறது.

பின்னர் ஒரு பெண் மீது காதல் உருவாகி, அவளும் அவனைக் காதலிக்க அவளிடம் கடந்தகால ‘மேட்டர்’களையெல்லாம் சொல்கிறாள். அவள் அதை பிரச்சனையாக நினைக்காததால் காதல் நல்லபடியாக கல்யாணத்தில் முடிகிறது.

அது தெரிந்தும் அந்த டீச்சரும் ஆன்ட்டியும் அவனை மீண்டும் தங்கள் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள திட்டமிடுகிறார்கள்.

அவன் வர்றத எதுக்கு விடணும் என நினைத்தானா? மனைவிக்கு உண்மையாக இருக்க முடிவெடுத்தானா? என்பது கதையின் மீதி…

மூன்று பேருடன் சல்ஜா செய்கிற நாயகனாக திரிகுண். மேன்லியாக இருக்கிறார். பிளேபாய் மாதிரியான கேரக்டருக்கு பொருந்துகிறார். கொஞ்சல், மிஞ்சல், தடவல், தழுவல் என சதைநாயகிகளுடன் கலந்துறவாடும் வேலையை அனுபவித்துச் செய்திருக்கிறார். காதலிக்கு உண்மையாக இருக்கவும் செய்கிறார். காமெடியிலும் அசத்துகிறார்.

ஹீரோயின் ஸ்ரீஜித்தாகோஷ் நேசம் பொங்கும் காதலியாகவும் இருக்கிறார்; கவர்ச்சியின் உச்சத்தையும் காட்டுகிறார்.

டீச்சராக இனியா, அவரது உடல்மொழியில் கவர்ச்சி, ஆபாசம் என எல்லாமும் இருக்கிறது. சுந்தரா டிராவல்ஸ் ராதா கிளுகிளுப்பு ஏரியாவில் நடமாடுகிறார்.

தம்பி ராமையாவும் சத்யனும் கதையில் மாமனார் மருமகன். அவர்களின் காமெடி கலாட்டாக்கள் ‘ச்சீ..ய்’ ரகம்.

பாடல்கள், பின்னணி இசை, ஒளிப்பதிவு அனைத்தும் கதைக்களத்துக்கு ஏற்றபடி அமைந்திருக்கிறது.

முகஞ்சுளிக்க வைக்கிற, கலாச்சாரத்துக்கு ஒத்துவராத இன்செஸ்ட் கதையொன்றை எடுத்துக்கொண்டு, அதை எந்தளவுக்கு ஆபாசமான படைப்பாக உருவாக்க முடியுமோ அந்தளவுக்கு உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஜி ராஜசேகர்.

படம் சென்ஸாரில் ‘ஏ’ சர்டிஃபிகேட் பெற்று வெளியாகியிருக்கிறது. முன்னதாக வெளியான டிரெய்லரும், பாடல்களும் இது பக்கா கில்மா படம் என்பதை சொல்லி விட்டது. ஆபாசக் குப்பை என்று சொல்வார்களே அந்த ரக படங்கள் உங்களுக்கு பிடிக்குமென்றால் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’யால் மனது குஷியாகலாம். பிடிக்காதென்றால் இயக்குநரைப் பிடித்து நாலு சாத்து சாத்தலாம் என்கிற அளவுக்கு வெறி வரலாம்.

-Rating 2 /5

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this