HomeMovie Review'சைரன்' சினிமா விமர்சனம்

‘சைரன்’ சினிமா விமர்சனம்

Published on

ஆயுள் தண்டனைக் கைதியொருவன் பரோலில் வந்து, சிலரை பரலோகத்துக்கு அனுப்பும் கதைக்களம்.

அவனுக்கு ஏன் தண்டனை கிடைத்தது? தண்டனைக்கு ஆளாக்கியவர்கள் யார்? சிம்பிளான திரைக்கதையில் ‘சைரன்.’

உயிர் காக்கும் உன்னத பணியில் அம்புலன்ஸ் டிரைவராக ஜெயம் ரவி. சாதி வெறி பிடித்த போலீஸுக்கு பகையாளியாகி மனைவியைப் பறிகொடுத்து தவிப்பதாகட்டும், மகளின் வெறுப்பைச் சம்பாதித்து மனம் கலங்குவதாகட்டும், சதிகாரர்களை வித்தியாசமான முறையில் சம்ஹாரம் செய்வதாகட்டும், சண்டைக் காட்சிகளில் வெறியேறி சீறுவதாகட்டும், யோகிபாபுவுடன் சேர்ந்து கலகலப்பூட்டுவதாகட்டும் அத்தனைக்காகவும் பாராட்டுக்களை அன்லிமிடெடாய் அள்ளிக் கொடுக்கலாம்.

எவன் நல்லவன் எவன் கெட்டவன் என தெளிவாக புரிந்துகொள்ள முயற்சிக்காமல், மனம்போன போக்கில் அதிகாரம் செலுத்துகிற போலீஸ் அதிகாரியாக கீர்த்தி சுரேஷ். நடிப்பிலிருக்கும் அலட்டல் அசத்தல்.

பரோலில் வந்த ஜெயம் ரவியை கண்காணிக்க நியமிக்கப்பட்டு, அவருக்கு நண்பனான மாறிவிடுகிற யோகிபாபுவின் அப்பாவித்தனம் கலகலப்புக்கு கேரண்டி தருகிறது.

ஜெயம் ரவிக்கு ஜோடியாக வருகிற அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் பங்களிக்க பெரிதாய் வாய்ப்பில்லை என்றாலும் பாவப்பட்ட பாத்திரத்திற்கு அவரது பரிதாப தோற்றம் பொருத்தமாக அமைந்திருக்கிறது.

சாதி வெறிபிடித்த டி எஸ் பியாக சமுத்திரகனி, போலீஸ் அதிகாரியாக அருவி மதன், ஹீரோவுக்கு அம்மாவாக துளசி, தங்கையாக சாந்தினி, மகளாக யுவினா பார்த்தவி என மற்றவர்களின் நடிப்பு நேர்த்தி.

பின்னணி இசையால் காட்சிகளுக்கு வேகமூட்டியிருக்கிறார் சாம் சிஸ்.

ஜீவி பிரகாஷின் இசையில் பாடல்களில் தாலாட்டின் மென்மையை அனுபவிக்கலாம். ‘அடியாத்தி’ பாடலில் உற்சாகம் வழிகிறது.

வழக்கமான பழிவாங்கல் கதையில் அப்பா மகள் பாசம், காதலுக்கு எதிரான சாதிவெறி என பல அம்சங்களை கலந்து கமர்ஷியல் படைப்பாக தந்திருக்கும் இயக்குநர் அந்தோணி பாக்யராஜ், தனக்கு விறுவிறுப்பாக கதை சொல்லத் தெரியும் என நிரூபித்திருக்கிறார். வித்தியாசமாகவும் சொல்லியிருந்தால் சைரன் சுமந்த ஆம்புலன்ஸ் பாய்ச்சல் அதிரிபுதிரியாக இருந்திருக்கும்.

Latest articles

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள மம்மட்டியான் ஸ்டார்ஸ், நட்பு, கனவுகள் மற்றும் கிரிக்கெட்...

இந்த படம் நம் நாட்டின் வரலாறு மற்றும் ஆன்மிக மரபுகளை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சி! -நாகபந்தம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விராட் கர்ணா 

அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்க புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான...

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

சில திரைப்படங்களின் சீக்வல் மட்டும்தான் வெளியீடு என்பதைத் தாண்டி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வாக மாறிவிடுகின்றன. குறிப்பாக...

இஸ்லாமியர்கள் குறித்த பார்வையை இந்த படம் மாற்றி இருக்கிறது என்பதை பெரும் வெற்றியாக நினைக்கிறேன்! -‘ஹபீபி’ படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் மீரா கதிரவன் பேச்சு

மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான ‘ஹபீபி’ திரைப்படத்தின் வெற்றிக்கு...

More like this