Monday, December 8, 2025
spot_img
HomeCinemaமிரட்டலான ஃபர்ஸ்ட் லுக்... காடுகளின் பின்னணியில் விறுவிறுப்பான சாகச திரில்லராக உருவாகும் ‘சத்தியமங்கலா.’

மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக்… காடுகளின் பின்னணியில் விறுவிறுப்பான சாகச திரில்லராக உருவாகும் ‘சத்தியமங்கலா.’

Published on

உலகின் அதிவேக ஆவணப்படத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்தவரும் குறும்படத்திற்காக‌ சர்வதேச விருதுகளை வென்றவருமான‌ ஆர்யன், ‘சத்தியமங்கலா’ என்ற பான் இந்தியா திரைப்படத்தை இயக்கி வருகிறார். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தை ஏஎஸ்ஏ புரொடக்‌ஷன் மற்றும் அயிரா புரொடக்‌ஷன்ஸ் பேனர்களில் ஷங்கர் பி மற்றும் ஷசிரேகா நாயுடு தயாரிக்கின்றனர்.

‘கோலி சோடா’ புகழ் முனிகிருஷ்ணா நாயகனாக நடிக்கும் ‘சத்தியமங்கலா’ படத்தில் கதாநாயகியாக கனக் பாண்டே நடிக்கிறார். தி கிரேட் காளி (WWE உலக சாம்பியன்), பாலிவுட் நடிகர் அர்பாஸ் கான், ராதா ரவி, சரிதா, ரவி காலே, ரெடின் கிங்ஸ்லி, ‘பாகுபலி’ பிரபாகர், விஜய் சிந்தூர், மனேதேஷ் ஹிராமத் மற்றும் சஞ்சய் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

படம் பற்றி இயக்குந‌ர் ஆர்யன் பேசுகையில், “காடுகளின் பின்னணியில் விறுவிறுப்பான சாகச திரில்லராக ‘சத்தியமங்கலா’ உருவாகி வருகிறது. இப்படத்தில் தான் ஏற்றிருக்கும் மிகவும் சவாலான பாத்திரத்திற்காக முனிகிருஷ்ணாவின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு அசாத்தியமானது. இதர‌ நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப‌ குழுவினரும் தங்கள் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்.

பாங்காக், நேபாளம் போன்ற இடங்களில் 32 நாட்களில் முதல் கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம். இலங்கை, பாங்காக், நேபாளம், தமிழ்நாடு, கர்நாடக வனம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இரண்டாவது கட்டம் படமாக்கப்படுகிறது. மிகவும் சிறப்பாக இப்படம் உருவாகி வருகிறது.

இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களான ஏஎஸ்ஏ புரொடக்ஷன் மற்றும் ஐரா நிறுவனங்களுக்கு நன்றி. இந்த படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையில் சிறப்பான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பரபரப்பான திரில் அனுபவமாக இருக்கும்” என்றார்.

இந்த படத்திற்கு ஷங்கர் ஆராத்யா ஒளிப்பதிவு செய்ய‌, வீர் சமர்த் இசையமைக்கிறார். ரவிச்சந்திரன் படத்தொகுப்பை கையாள்கிறார். ஸ்டீபன் எம் ஜோசப் வசனங்களை எழுத‌, சின்னி பிரகாஷ் நடன வடிவமைப்பை கவனிக்க‌, பீட்டர் ஹியன் சண்டைப் பயிற்சியை வழங்குகிறார்.

Latest articles

சூர்யா, நஸ்ரியா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது! 

சூர்யா, நஸ்ரியா நசீம் நடிக்கும் ‘சூர்யா 47’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது....

பிரமாண்ட பிளாக்பஸ்டர் ‘படையப்பா’ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளில் ரீ ரிலீஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 50 வருட பொன்விழாவை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம்...

’த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளை பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் இணைந்து பெற்றுள்ளன!

இந்த ஆண்டின் மிகப்பெரிய பான் - இந்தியா திரைப்பட கையகப்படுத்தல் ஒப்பந்தங்களில் ஒன்றான பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸுடன்...

 ‘மூன்வாக்’ படத்திற்காக ஐந்து பாடல்களை பாடிய இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்! 

இந்தியாவின் இரண்டு ஐகானிக் நாயகர்களான ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் திரைப்படம்...

More like this

சூர்யா, நஸ்ரியா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது! 

சூர்யா, நஸ்ரியா நசீம் நடிக்கும் ‘சூர்யா 47’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது....

பிரமாண்ட பிளாக்பஸ்டர் ‘படையப்பா’ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளில் ரீ ரிலீஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 50 வருட பொன்விழாவை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம்...

’த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளை பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் இணைந்து பெற்றுள்ளன!

இந்த ஆண்டின் மிகப்பெரிய பான் - இந்தியா திரைப்பட கையகப்படுத்தல் ஒப்பந்தங்களில் ஒன்றான பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸுடன்...
error: Content is protected !!