HomeCinemaநான் நிஜத்தில் எப்படியோ அதே மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்! -'போர்' பட நாயகி சஞ்சனா நடராஜன்

நான் நிஜத்தில் எப்படியோ அதே மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்! -‘போர்’ பட நாயகி சஞ்சனா நடராஜன்

Published on

நடிகை சஞ்சனா நடராஜன் தமிழ் மொழியை நேர்த்தியாக பேசி, தனித்துவமான கதாபாத்திரங்களில் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பவர். இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தில் அவர் தனது சிறப்பான நடிப்பிற்காக பாராட்டுகளைப் பெற்றார். அடுத்ததாக விரைவில் வரவிருக்கும் ‘போர்’ திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார்.

டீசரில் அவரது டிரெண்டி & ஃபேஷனபிள் தோற்றம் அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

படத்தில் தனது கதாபாத்திரத்தைப் பற்றி பேசியபோது, ”படத்தின் கதை நிஜ சம்பவங்களின் அடிப்படையில் உருவானது. ‘ரிஷிகா’ என்ற பெயரில் மருத்துவ மாணவியாக நடித்துள்ளேன். அந்த பாத்திரம் எனது நிஜ வாழ்க்கை இயல்பை ஒத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது.

நண்பர்கள் குழுவைச் சுற்றி சுழலும் இந்தக் கதை அவர்களின் கடந்த கால சம்பவங்கள் எப்படி தற்போதைய வாழ்க்கையை பாதிக்கிறது என்பதைக் கூறும். இது அரசியல் விஷயங்களைப் பேசுவதோடு, சில சமூகப் பிரச்சினைகளையும் சொல்லியிருக்கிறது. படக்குழுவில் உள்ள அனைவரும் உற்சாகத்தோடு வேலை செய்தோம். இயக்குநர் பிஜாய் நம்பியாரும் படத்தை தெளிவான பார்வையோடு கொண்டு சென்றார். படத்தில் எனது கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பார்வையாளர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

Latest articles

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

ஐ’ம் கேம் சினிமா விமர்சனம்

அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை, சூதாட்டத்தில் ஈடுபாடு என்றிருக்கிற நாயகன் துல்கர் பல கோடி கடனில் சிக்குகிறார். ஒரு கையும் பறிபோகிறது....

More like this