HomeCinema‘ஈரம்' வெற்றிப்பட கூட்டணி மீண்டும் இணைந்த ‘சப்தம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘ஈரம்’ வெற்றிப்பட கூட்டணி மீண்டும் இணைந்த ‘சப்தம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Published on

கதை சொல்லும் விதத்தாலும் மேக்கிங்காலும் ரசிகர்களை ஈர்க்கக்கூடிய வெற்றிப்பட இயக்குநர் ‘ஈரம்’ அறிவழகன், ஈரம் படத்தின் கதாநாயகன் ஆதி, ஈரம் படத்துக்கு இசையமைத்த தமன் மூவரும் மீண்டும் இணைந்திருக்கும் ஹாரர், திரில்லர் படம் ‘சப்தம்.’

‘ஈரம்’ படத்திற்கு பின் அறிவழகன் இயக்கியிருக்கும் ஹாரர் திரில்லர் படம் இது. படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

ஈரம் படம் முழுவதும் மழை மற்றும் மழை சார்ந்த காட்சிகளை மையப்படுத்தி உருவானது. சப்தம் படத்தில் சிறப்பு, பேய் தண்ணீரின் வழி வருகிறது.

மும்பை, மூணாறு, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. மலை மற்றும் குளிர் பிரதேசம் சார்ந்த பகுதிகளை மையப்படுத்தியும், சப்தத்தை மையப்படுத்தியும் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தின் இடைவேளை மற்றும் நிறைவுக் காட்சிக்காக ரூபாய் 2 கோடி செலவில், 120 வருட பழமையான கல்லூரி நூலகம் போன்ற பிரமாண்டமாக செட் உருவாக்கி படப்பிடிப்பு நடந்துள்ளது. குறிப்பாக சவுண்ட் எஃபெக்ட்ஸ் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் பின்னணி இசைக்காக தமன் மற்றும் படக்குழுவினர் ஹங்கேரி செல்ல உள்ளனர்.

‘மகாமுனி’ படம் மூலம் கவனம் ஈர்த்த அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்ய, இயக்குநர் அறிவழகனின் ‘வல்லினம்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார்.

படத்தை ‘7ஜி ஃபிலிம்ஸ்’ சிவா, ‘ஆல்பா ஃப்ரேம்ஸ்’ இயக்குநர் அறிவழகன் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. விரைவில் டீசர், டிரெய்லர் வெளியாகவிருக்கிறது.

Latest articles

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் ஃபௌசி டிசம்பர் 3-ம் தேதி வெளியாகிறது!

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் படைப்பாற்றல் மிக்க இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் புகழ்பெற்ற மைத்ரி மூவி மேக்கர்ஸ்...

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியும், நினைவாற்றலும் பெருக நடிகர் ஆர்யன் ஷாம் முன்னிலையில் ஆயுர்வேத ஸ்வர்ணபிராசன மருந்தை வழங்கிய அமைச்சர் வெங்கடரமணன்!  

பாரம்பரியம், மருத்துவம், திரையுலகம் மூன்றும் ஒன்றிணைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக 120 ஆண்டுகள் பழமையான வெங்கடரமணா ஆயுர்வேத மருந்தகத்தின்...

அருள்வான் சினிமா விமர்சனம்

கல்வியின் அருமை புரியாமல், நமக்கெதற்கு கல்வி என்ற மனநிலையில் வாழ்கிற மலை வாழ் மக்கள். அவர்களில் ஒருவரான சிறுமி...

Over 100 Plastic Surgeons from Across India Gather in Chennai to Mark World Plastic Surgery Day!

Chennai Celebrates World Plastic Surgery Day with National High-Definition Liposuction Masterclass and Public Awareness...

More like this