HomeGeneralகூடு, ஆக்டோபஸ் தமிழ் திரைப்படங்களை வெளியிட்டு அடுத்தகட்ட வளர்ச்சியைத் துவங்கிய கல்ட் டிஜிட்டல்!

கூடு, ஆக்டோபஸ் தமிழ் திரைப்படங்களை வெளியிட்டு அடுத்தகட்ட வளர்ச்சியைத் துவங்கிய கல்ட் டிஜிட்டல்!

Published on

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் சுயாதீன பன்மொழி உள்ளடக்கத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கல்ட் டிஜிட்டல் ஒரே நாளில் இரண்டு தமிழ் திரைப்பட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இந்தி, மராத்தி, தமிழ் மற்றும் மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் படைப்புகளை உருவாக்கி வரும் சுனில் ஜெயின் மற்றும் ஆதித்யா ஜோஷியின் கல்ட் டிஜிட்டல் நிறுவனம், கூடு மற்றும் ஆக்டோபஸ் ஆகிய இரண்டு புதிய தமிழ் திரைப்படங்களுடன் அடுத்தக்கட்டத்திற்கு நகர்கிறது. 2026- 2027 ஆம் ஆண்டிற்கான திட்டத்தையும் உருவாக்கி வருகிறது.
கடந்த நவம்பர் 13ஆம் தேதி ஒரே நாளில் இரண்டு முக்கியமான தமிழ் படைப்புகளை இந்நிறுவனம் அறிவித்தது. பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்கைமூன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கும் கூடு திரைப்படம் 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ் ஒரிஜினல் வெப் சீரிஸான ‘ஆக்டோபஸ்’ நவம்பர் 27ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
அடுத்தடுத்து வெளியான இந்த இரண்டு அறிவிப்புகளும், சுயாதீன திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகத் தொடங்கிய கல்ட் டிஜிட்டல், இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் பன்மொழி உள்ளடக்கத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து வருவதை காட்டுகிறது. பல்வேறு மொழிகள், பிராந்தியங்கள் மற்றும் தளங்களுக்கு ஏற்ற தனித்துவமான கதைகளை உருவாக்கி, தயாரிப்பதே இந்நிறுவனத்தின் நோக்கமாகும்.
கடந்த சில ஆண்டுகளாக ஜெயின் மற்றும் ஜோஷி இணைந்து பல்வேறு திரையுலகங்களில் பாராட்டத்தக்க படைப்புகளை உருவாக்கி வருகின்றனர். ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய தகடக் 2, தோண்டி சாம்ப்யா ஏக் பிரேம் கதா, தமிழ் வரலாற்றுப் பின்னணியில் உருவான ஆகஸ்ட் 16, 1947, உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான மலையாளத் திரைப்படமான கெட்-செட் பேபி, ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குநர் அனந்த் மகாதேவன் உடன் இணைந்து உருவாக்கிய புலே, தேத் பீகா சமீன் மற்றும் சமீபத்தில் வெளியான மராத்தித் திரைப்படமான துஜ்யா அய்லா உள்ளிட்டவை இவர்கள் தயாரிப்பில் வெளியானவை என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு முறை தேசிய விருது பெற்ற இயக்குநர் சுஜய் தஹாகே இயக்கத்தில் உருவாகும் ரக்தஃபல், ஜோயல் விஜய் இயக்கும் தமிழ் திரைப்படமான கூடு மற்றும் தமிழ் வெப் சீரிஸான ஆக்டோபஸ் ஆகியவை அடுத்து வெளியாகவுள்ளன. மேலும், இந்நிறுவனம் தயாரித்துள்ள Save The God என்ற குறும்படம், இந்த ஆண்டு கோவாவில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இயக்குநர் ரவி சங்கர் கௌஷிக் இயக்கத்தில், சுபர்ன் வர்மாவுடன் இணைந்து தயாரிக்கும் இந்தித் திரைப்படமான Aanch படத்தையும் கல்ட் டிஜிட்டல் நிறுவனம் தயாரிக்கிறது. இதுமட்டுமல்லாது, இந்தியாவின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றின் ஆதரவுடன், நடிகர்கள் பலர் இணைந்து நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படம் 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக, ஐந்து திரைப்படங்கள் மற்றும் ஒரு பிரம்மாண்டமான வெப் சீரிஸை கல்ட் டிஜிட்டல் தயாரித்து வருகிறது.
இதுபற்றி திரைப்படத் தொழில்முனைவோர் மற்றும் தயாரிப்பாளர் ஆதித்யா ஜோஷி கூறியதாவது, “அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியத் திரைப்படத் தயாரிப்புத் துறையின் எதிர்காலத்தை திரைப்படத் தொழில்முனைவோரான தயாரிப்பாளர்கள்தான் தீர்மானிப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம். கதை சொல்லும் திறனுடன், வணிக நோக்கம், பார்வையாளர்களைப் பற்றிய புரிதல் மற்றும் நல்ல கதைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்துச் செயல்படுபவர்களே எதிர்காலத் திரைப்படத் துறையை வழிநடத்துவார்கள்.
கல்ட் டிஜிட்டல் நிறுவனத்தில், ஒவ்வொரு படைப்புக்கும் பொருத்தமான கதை, சரியான படைப்பாளர் மற்றும் சரியான பார்ட்னரை அடையாளம் கண்டு, புதிய தலைமுறை பன்மொழி உள்ளடக்கத் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி வருகிறோம். எங்களது அணுகுமுறை என்பது கூட்டாண்மை மற்றும் சந்தையை மையமாகக் கொண்ட திட்டமிடல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. சிறந்த கதைகளை தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒன்றிணைத்து, பல்வேறு மொழிகள், பிராந்தியங்கள் மற்றும் பார்வையாளர்களைக் கடந்து பயணிக்கக்கூடிய படைப்புகளை உருவாக்குவதே எங்களது நோக்கம்” என்றார்.
தற்போது, ஏற்கெனவே செயல்பட்டு வரும் மொழிச் சந்தைகளைக் கடந்து குஜராத்தி திரைப்படத் துறையிலும் நுழைய கல்ட் டிஜிட்டல் திட்டமிட்டு வருகிறது. இதற்காக அத்துறையைச் சேர்ந்த முன்னணி இயக்குநர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், மராத்தி, இந்தி, குஜராத்தி, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அடுத்தகட்டமாக ஆறு முதல் எட்டு திரைப்படங்களை உருவாக்குவதற்கான பணிகளையும் இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம், கதைகளுக்கும் கதை சொல்லிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் நிறுவனமாக தனது இருப்பை மேலும் வலுப்படுத்த கல்ட் டிஜிட்டல் திட்டமிட்டுள்ளது.
கல்ட் டிஜிட்டல் நிறுவனத்தைப் பொறுத்தவரை, நவம்பர் 13 என்பது வெறும் இரண்டு படைப்புகளின் அறிவிப்பு வெளியான நாள் மட்டுமல்ல! அதன் வளர்ச்சிப் பயணத்தின் அடுத்த அத்தியாயம் தொடங்கிய நாளாகவும் அமைந்துள்ளது.

Latest articles

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அன்புடன் மகி’  இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது! 

லார்க் ஸ்டுடியோஸ் (Lark Studios) மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் (Parallel Universe Pictures) இணைந்து தயாரிக்கும் புதிய...

நவம்பர் 20-ம் தேதி Sony LIV-ல் வெளியாகிறது அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் நடித்த ‘அன்பில் அவன்.’

காதல், சஸ்பென்ஸ் மற்றும் ஆக்‌ஷன் என உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக வரவேற்பைத்...

கௌசல்யா அழுத்தமான வேடத்தில் நடிக்கும் ‘லவ் லாக்’ திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!

ஸ்ரீ வெங்கடாசலபதி விசுவல் ஆன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவராமன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எட்வின்...

வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 01’ – முதல் கட்டப் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது!

‘ரங்கோலி’, ‘மெட்ராஸ்காரன்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படமான ‘புரொடக்‌ஷன்...

More like this

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அன்புடன் மகி’  இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது! 

லார்க் ஸ்டுடியோஸ் (Lark Studios) மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் (Parallel Universe Pictures) இணைந்து தயாரிக்கும் புதிய...

நவம்பர் 20-ம் தேதி Sony LIV-ல் வெளியாகிறது அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் நடித்த ‘அன்பில் அவன்.’

காதல், சஸ்பென்ஸ் மற்றும் ஆக்‌ஷன் என உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக வரவேற்பைத்...

கௌசல்யா அழுத்தமான வேடத்தில் நடிக்கும் ‘லவ் லாக்’ திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!

ஸ்ரீ வெங்கடாசலபதி விசுவல் ஆன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவராமன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எட்வின்...