HomeGeneralநவம்பர் 20-ம் தேதி Sony LIV-ல் வெளியாகிறது அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் நடித்த...

நவம்பர் 20-ம் தேதி Sony LIV-ல் வெளியாகிறது அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் நடித்த ‘அன்பில் அவன்.’

Published on

காதல், சஸ்பென்ஸ் மற்றும் ஆக்‌ஷன் என உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக வரவேற்பைத் தொடர்ந்து வரும் நவம்பர் 20 முதல் Sony LIV ஓடிடி தளத்தில் பிரத்தியேகமாக வெளியாகிறது.
அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் இணைந்து நடித்துள்ள இப்படம், சூர்யா மற்றும் இயல் என்ற காதல் ஜோடியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. ஒன்றாக இணைந்து அழகான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவுடன் வாழும் இவர்களின் வாழ்க்கையில், எதிர்பாராத சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்கின்றன. அவர்களின் உலகமே தலைகீழாக மாறும் சூழலில், காதல், நம்பிக்கை மற்றும் மன உறுதி என அனைத்தும் கடுமையான சோதனைக்கு உள்ளாகின்றன.
உணர்வுப்பூர்வமான காதல் கதையுடன் விறுவிறுப்பான சஸ்பென்ஸ் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளையும் இணைந்து உருவாகியுள்ள இப்படம், எதிர்பாராத சூழல்கள் ஒருவரின் வாழ்க்கைப் பயணத்தை எப்படியெல்லாம் மாற்றியமைக்கின்றன என்பதையும், தான் நேசிக்கும் ஒருவருக்காக ஒருவர் எந்த எல்லை வரை செல்லத் தயாராக இருப்பார் என்பதையும் பேசுகிறது.
இப்படம் குறித்து நடிகரும் தயாரிப்பாளருமான அசோக் செல்வன் கூறுகையில்,
“இரண்டு பேர் ஒன்றாக இணைந்து தங்களுக்கான வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள விரும்புகிறார்கள். ஆனால், அவர்கள் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத சூழ்நிலைகளில் சிக்கிக்கொள்கிறார்கள். இதுதான் இப்படத்தின் அடிப்படைக் கதை. நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இப்படத்தில் பணியாற்றியது எனக்கு இந்தப் பயணத்தை மேலும் சிறப்பானதாக மாற்றியது. திரையரங்குகளில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தற்போது Sony LIV மூலம் இன்னும் அதிகமான ரசிகர்களைச் சென்றடைய இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.
இப்படத்தில் சபுமோன் அப்துசமத், கதிர்பாலு மற்றும் மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ள இப்படத்திற்கு விக்னேஷ் ராஜா கதை எழுதியுள்ளார். திரைக்கதையை விக்னேஷ் ராஜா, ஆர். கார்த்திகேயன் மற்றும் அசோக் செல்வன் இணைந்து எழுதியுள்ளனர். ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
காதல், சஸ்பென்ஸ், ஆக்‌ஷன் என அனைத்தும் கலந்த ‘அன்பில் அவன்’ திரைப்படத்தை நவம்பர் 20 முதல் Sony LIV ஓடிடி தளத்தில் காணலாம்.

Latest articles

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அன்புடன் மகி’  இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது! 

லார்க் ஸ்டுடியோஸ் (Lark Studios) மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் (Parallel Universe Pictures) இணைந்து தயாரிக்கும் புதிய...

கூடு, ஆக்டோபஸ் தமிழ் திரைப்படங்களை வெளியிட்டு அடுத்தகட்ட வளர்ச்சியைத் துவங்கிய கல்ட் டிஜிட்டல்!

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் சுயாதீன பன்மொழி உள்ளடக்கத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கல்ட் டிஜிட்டல் ஒரே நாளில்...

கௌசல்யா அழுத்தமான வேடத்தில் நடிக்கும் ‘லவ் லாக்’ திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!

ஸ்ரீ வெங்கடாசலபதி விசுவல் ஆன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவராமன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எட்வின்...

வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 01’ – முதல் கட்டப் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது!

‘ரங்கோலி’, ‘மெட்ராஸ்காரன்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படமான ‘புரொடக்‌ஷன்...

More like this