HomeGeneralபடம் பார்த்து அம்மா, தங்கை, குடும்பத்தினர் அனைவரும் வாழ்த்தினார்கள்! -சிக்மா படத்தின் பிரஸ் மீட்டில் இயக்குநர்...

படம் பார்த்து அம்மா, தங்கை, குடும்பத்தினர் அனைவரும் வாழ்த்தினார்கள்! -சிக்மா படத்தின் பிரஸ் மீட்டில் இயக்குநர் ஜேசன் சஞ்சய்

Published on

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது.
நடிகை மகாலக்‌ஷ்மி, ” இந்த திரைப்படத்தில் நல்ல கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் சஞ்சய்க்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி. இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை”.
கலை இயக்குநர் பெஞ்சமின், “சஞ்சய் ப்ரோ என்ன கதை சொன்னாரோ அதை தான் படமாக்கியிருக்கிறார். நானும் என் பணியை சரியாக செய்திருக்கிறேன் என நம்புகிறேன். என்னுடைய அணியினருக்கு நன்றி”.
நடிகர் அன்புதாசன், ” இந்தப் படத்தில் கேஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். சஞ்சய் ப்ரோ, லைகா நிறுவனம் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி”.
நடிகர் ஷிவ் பண்டிட், “கடந்த ஒன்றரை வருடமாக எங்களுடைய உழைப்பிற்கு ஆதரவு கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. வாய்ப்பு கொடுத்த சஞ்சய் ப்ரோ, லைகா நிறுவனத்திற்கு நன்றி”.
நடிகை ஃபரியா அப்துல்லா, “ரசிகர்களுடன் படம் பார்த்தது நல்ல அனுபவம். உங்களுக்கும் படம் நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன்”.
லைகா புரொடக்சன்ஸ், தமிழ்குமரன், “மிகவும் கஷ்டப்பட்டு சஞ்சய் இந்தப் படம் எடுத்துருக்கிறார். இனி, இது உங்களுடைய படம். குடும்பமாக இணைந்து நல்ல படம் கொடுத்திருக்கிறோம் என்ற மனநிறைவு இருக்கிறது. லைகா நிறுவனம் மூலம் சஞ்சயை அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்”.
இயக்குநர் சஞ்சய், ” கடந்த மூன்று வருடங்களாக என்னுடன் பயணம் செய்த லைகா நிறுவனத்திற்கும் படக்குழுவினருக்கும் நன்றி. படம் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன். சிக்மா படத்தின் ரிலீஸுக்கு பிறகுதான் நடிப்பா இயக்கமா என்பதை முடிவு செய்வேன். படம் பார்த்த அம்மா, தங்கை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் வாழ்த்தினர்”.

Latest articles

டோண்ட் டிரபிள் தி டிரபிள்

ஆம்புலன்ஸ் டிரைவர் சூரிக்கு ஒரு பிரச்சனையிலிருந்து மீண்டு வர 25 லட்சம் தேவை. அந்த தேவையை தன்னுடன் தொடர்பிலிருக்கிற...

1000 பேருக்கு ‘அரிசி தானம்’ வழங்கி தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடிய டி ராஜேந்தர்!

திரைக்கலைஞர் டி.ராஜேந்தர் தனது 71வது பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு 'அரிசி தானம்' வழங்கினார். நிகழ்வு அகில இந்திய டி.ராஜேந்தர்...

‘டோரதி என் மனதுக்கு நெருக்கமான திரைப்படம்! -நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷின் திரைப்பயணத்தில் ‘மகாநதி’ திரைப்படம் இன்றளவும் மிக முக்கியமான திரைப்படமாக உள்ளது. அந்த வரிசையில், அவர்...

‘சிக்மா’ தமிழ் திரையுலகில் எனக்கு மீண்டும் புதிய தொடக்கத்தை கொடுத்துள்ளத! -நடிகர் ஷிவ் பண்டிட்

வசீகரமான தோற்றம் மற்றும் திறமையான நடிப்பு என ’லீலை’ திரைப்படத்தின் கதாநாயகனாக அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் ஷிவ் பண்டிட்....

More like this