கதைநாயகன் சூரிக்கு ஒரு பிரச்சனையிலிருந்து மீண்டு வர 25 லட்சம் தேவை. அந்த தேவையை தன்னுடன் தொடர்பிலிருக்கிற சிறுமியின் மந்திர சக்தியால் நிறைவேற்றிக் கொள்ள முடிவெடுத்து அதற்கான முயற்சியில் இறங்குகிறார். பனம் கிடைத்ததா, பிரச்சனைகள் தீர்ந்ததா இல்லையா என்பது மீதிக் கதை…
சூரிக்கு என்ன பிரச்சனை, சிறுமிக்கு மந்திர சக்தி எப்படி வந்தது என்பதெல்லாம் இன்ட்ரெஸ்டிங்.
சுவாரஸ்யமான மோசடிகளில் ஈடுபடுகிற ஆம்புலன்ஸ் டிரைவர் சூரியாக ஃபகத் ஃபாசில் செய்கிற அலப்பரைகளும், சிறுமியிடமும் லோக்கல் தாதாவிடமும் மாட்டிக் கொண்டு தவிப்பதும் கலகலப்புக்கு கேரண்டி. எமோஷ்னல் காடசிகளிலும் ஸ்கோர் வாங்குகிறார்.
தனக்கிருக்கும் சிறிய மேஜிக்கல் பவரை வைத்து எதிராளிகளை ஓடஓட விரட்டுவது, அதே பவரை வைத்து தன் மீது அன்பு காட்டும் ஃபகத் ஃபாசில் ஆபத்திலிருந்து காப்பாற்றுவது என மனதைக் கொள்ளையடிக்கும் நடிப்பைத் தந்திருக்கிறார் சிறுமியாக வருகிற ஷாரா பாலேக்கர்.
வில்லன்களாக வருகிற மகேஷ் மஞ்ச்ரேக்கரிலிருந்து மற்ற நடிகர் நடிகைகள் தங்கள் கேரக்டர்களுக்கு நடிப்பால் நியாயம் செய்திருக்கிறார்கள்.
கால பைரவாவின் பின்னணி இசையும் பாடல்களும் கதையோட்டத்துக்கு எனர்ஜி தருகிறது.
ஹைதராபாத்தின் சாலைகள் முதல் சந்து பொந்துகள் வரை சுற்றிச் சுழன்று பேண்டஸி கதைக் களத்திற்கு ஏற்ற வண்ணங்களுடன் காட்சிகளைப் பதிவு செய்துள்ளார்.
கதை கொஞ்சம் புதிதாக இருக்க திரைக்கதையில் காமெடி, எமோஷ்னல் என கலந்துகட்டி, ஃபெர்பாமென்ஸில் தூள் கிளப்புகிறவர்களை நடிக்க வைத்திருப்பது படத்தின் பலம். வாரக் கடைசி பொழுதுபோக்குக்கு நல்ல சாய்ஸ்.
Rating 3 /5 

