HomeGeneralதமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ ஜியோஹாட்ஸ்டாரின் 'செகண்ட் லவ்.' நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து...

தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ ஜியோஹாட்ஸ்டாரின் ‘செகண்ட் லவ்.’ நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்!

Published on

தமிழில் டேட்டிங் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு புதிய கோணத்தை தரும் வகையில், ஜியோஹாட்ஸ்டார் தனது புதிய ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘செகண்ட் லவ்’-ஐ அறிவித்துள்ளது. ஜூலை 13 முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். காதலுக்கு இன்னொரு வாய்ப்பு எல்லோருக்கும் உள்ளது என்ற கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோஹாட்ஸ்டார் தமிழ், ‘செகண்ட் லவ்’ நிகழ்ச்சியின் முதல் புரோமோவை வண்ணமயமான இசை வீடியோவாக வெளியிட்டுள்ளது. நிகழ்ச்சி குறித்து நடிகை ரம்யா கிருஷ்ணன் உற்சாகமாக விவரிக்க, ஸ்ருதிகா அர்ஜூன் நிகழ்ச்சியின் கியூபிட்டாக வருகிறார். நம்பிக்கை, காயங்களில் இருந்து மீள்வது மற்றும் மீண்டும் காதலை கண்டடையும் மகிழ்ச்சியை இந்த புரோமோ மூலம் பார்க்கலாம். புரோமோவின் இறுதியில், “காதலுக்கு காரணம் தேவையில்லை. இது காதலின் பிராண்ட் நியூ சீசன்” என இந்த நிகழ்ச்சியின் கேப்ஷனை ரம்யா கிருஷ்ணன் சொல்கிறார்.

கடந்த காலத்தை விட்டு விலகி, வாழ்க்கையில் புதிய உறவையும், புதிய காதலையும் தேடும் நபர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கும் வித்தியாசமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக ‘செகண்ட் லவ்’ இருக்கும். உணர்வுப்பூர்வமான தருணங்கள், நம்பிக்கை, நகைச்சுவை மற்றும் மனித உறவுகளை இணைக்கும் இந்த நிகழ்ச்சி, நவீன கால உறவுகளையும், மீண்டும் காதலை ஏற்றுக்கொள்ளும் துணிச்சலையும் புதிய கோணத்தில் வழங்க இருக்கிறது.

பிக் பாஸ் போன்ற மிகப்பெரிய வெற்றிப் பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, தரமான மற்றும் புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை இந்திய ரசிகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது ஜியோஹாட்ஸ்டார் மற்றும் பனிஜாய் ஆசியா கூட்டணி. தற்போது ‘செகண்ட் லவ்’ மூலம் மீண்டும் புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சியை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

‘செகண்ட் லவ்’ நிகழ்ச்சியின் மூலம், நம்பிக்கை, மனமாற்றம் மற்றும் காதலை கொண்டாடும் தனித்துவமான ரியாலிட்டி நிகழ்ச்சியை தனது ஒரிஜினல்ஸில் இணைத்துள்ளது ஜியோஹாட்ஸ்டார்.

‘செகண்ட் லவ்’ நிகழ்ச்சியின் வெளியீட்டை முன்னிட்டு வெளியாகும் புதிய அப்டேட்களை அறிய, ஜியோஹாட்ஸ்டார் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் தமிழ் சமூக வலைதளப் பக்கங்களை பின்தொடருங்கள்.

ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் ஜூலை 13 முதல் ‘செகண்ட் லவ்’ நிகழ்ச்சி தமிழில் ஸ்ட்ரீம் ஆகும்.

Latest articles

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது! – நடிகை சிம்ரன் 

சில கலைஞர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே ஜொலிப்பார்கள். ஆனால், மிகச் சிலரே காலம் தாண்டியும் என்றும் நிலைத்திருப்பார்கள். இந்த...

நாயகன் முதல் வில்லன் வரை 11 அதிரடி பாத்திரங்களை ஏற்று நடிக்கும் யோகிபாபு!

9 லைட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் முத்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தை ஆர். கிஷோர் குமார் இயக்க, யோகி...

‘லவ் ஓ லவ்’ திரைப்படத்திற்கு U/A 13+ சான்றிதழ்; ஜூலை 10 அன்று உலகமெங்கும் பிரம்மாண்ட ரிலீஸ்!

இளைஞர்களைக் கவரும் வண்ணம் துள்ளலான காதல் கதையாக உருவாகியிருக்கும் 'லவ் ஓ லவ்' திரைப்படம் தணிக்கை அதிகாரிகளால் U/A...

Tamil Nadu Creates History at National Ice Hockey Championship; Team Meets Mrs. Latha Rajinikanth!

The Tamil Nadu Ice Hockey Association (TNIAH) has scripted a historic chapter in the...

More like this