HomeGeneral'லவ் ஓ லவ்' திரைப்படத்திற்கு U/A 13+ சான்றிதழ்; ஜூலை 10 அன்று உலகமெங்கும் பிரம்மாண்ட...

‘லவ் ஓ லவ்’ திரைப்படத்திற்கு U/A 13+ சான்றிதழ்; ஜூலை 10 அன்று உலகமெங்கும் பிரம்மாண்ட ரிலீஸ்!

Published on

இளைஞர்களைக் கவரும் வண்ணம் துள்ளலான காதல் கதையாக உருவாகியிருக்கும் ‘லவ் ஓ லவ்’ திரைப்படம் தணிக்கை அதிகாரிகளால் U/A 13+ சான்றிதழ் வழங்கப்பட்டு, வரும் ஜூலை 10ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகியுள்ளது.

சினிமா மீடியா & எண்டர்டெய்ன்மெண்ட் லிமிடெட் மற்றும் கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூஷன் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தினேஷ் ராஜ் மற்றும் ஜி தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்தை மகேஷ் ராஜேந்திரன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் ட்ரைலர், ரசிகர்களிடமும் திரைத்துறையினரிடமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. புதுமையான காதல் கதைக்களம், கலகலப்பான நகைச்சுவை, வண்ணமயமான காட்சிகள் மற்றும் மனதைத் தொடும் உணர்ச்சிகரமான தருணங்களுடன் டிஜிட்டல் தளங்களில் இந்த ட்ரைலர் ட்ரெண்டாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.

இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களின் ப்ளேலிஸ்ட்டை ஆக்கிரமித்துள்ளன. துள்ளலான ‘ப்ரோக் பாய்’ பாடல் இளைஞர்களின் தேசிய கீதமாக மாறியுள்ள நிலையில், மெல்லிசைப் பாடலான ‘சகுரா சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் மற்றும் ஹூக் ஸ்டெப்களால் வைரல் ஹிட்டாகியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் பிரம்மாண்ட இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். விழாவில் திரையிடப்பட்ட பாடல்களும் ட்ரைலரும், படத்தின் இளமைத் துடிப்பான மேக்கிங்கிற்காகப் பெரிதும் பாராட்டப்பட்டன.

படத்தில் பவிஷ் நாராயண் மற்றும் நாக துர்கா முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் செல்வராகவன், கே.எஸ். ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா, அஷ்வத், சௌந்தர்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பாக்ஸ்ன் (Foxn) இசையமைக்க, பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். என்.பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு பணிகளையும், லலிதா வலசமுத்து நிதி கட்டுப்பாட்டாளர் பணிகளையும் கவனித்துள்ளனர்.

குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் ரசிக்கும்படியான ஜனரஞ்சகமான திரைக்கதை, எமோஷன், காமெடி மற்றும் சூப்பர் ஹிட் பாடல்களுடன் உருவாகியுள்ள ‘லவ் ஓ லவ்’ திரைப்படம், வரும் ஜூலை 10, 2026 முதல் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் தியேட்டர் கொண்டாட்டத்திற்குத் தயாராகிவிட்டது.

Latest articles

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

More like this

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...