HomeCinemaசம்ஹாரம் சினிமா விமர்சனம்

சம்ஹாரம் சினிமா விமர்சனம்

Published on

இரவு நேரம், இளைஞன் ஒருவன் யாரும் நுழைந்து விட முடியாத அளவுக்கு கண்காணிப்பு வட்டத்துக்குள் இருக்கும் தன் காதலியின் வீட்டுக்குள் சாமர்த்தியமாக நுழைகிறான். காதலனும் காதலியுமாக சேர்ந்து விடிவதற்குள் அந்த வீட்டுக்குள் தங்கியுள்ள, ஒரு நபரைக் சம்ஹாரம் செய்ய அதாவது கொலை செய்ய திட்டமிடுகிறார்கள். அவர்கள் யாரைக் கொல்ல நினைக்கிறார்களோ அவரை கொல்ல இன்னொரு நபரும் அந்த வீட்டுக்குள் வருகிறார்.

கொலை செய்ய திட்டமிடுகிற அளவுக்கு அவர் என்ன குற்றம் செய்தார்? திட்டமிட்டபடி கொலை செய்தார்களா? காதலனும் காதலியும் மண வாழ்க்கையில் இணைந்தார்களா? இல்லையா?

இப்படியான கேள்விகளுக்கு பதில்கள் மீதிக் கதையில்… இயக்கம் ராம்பிரபா

காதலியாக ஷருமிஸா. கிட்டத்தட்ட படம் முழுக்க கவர்ச்சியாக காட்டுகிற ஒரே உடையில் வருகிறார். தன்னை வீட்டுக்குள் அடைத்து வைத்திருக்கிற அண்ணனை ஏமாற்றி காதலனை வீட்டுக்கு வர வைப்பதில் பரபரப்பு, அவனுடன் சேர்ந்து கொலை செய்ய சுறுசுறுப்பு என நடிப்பு துடிப்பாக இருக்கிறது.

தங்கையின் காதலுக்கு எதிரியாவது, தான் தீர்மானித்த வாலிபனுக்கு தங்கையைக் கல்யாணம் செய்து வைக்க முயற்சிப்பது என வில்லனாக செயல்பட்டிருக்கிறார் பிரஜன். நடிப்பில் குறையில்லை; ஆக்சனில் அதிரடி அளவாக இருக்கிறது.

ஷருமீஸாவை திருமணம் செய்து கொள்ளவிருக்கிற மாப்பிள்ளையாக கங்கேஷ் சவராட்டில் கற்பழிப்பது, கொலை செய்வது என மிதமாக மிரட்டியிருக்கிறார். ஷருமீஸாவின் காதலனாக மனோஜ், அண்ணியாக நியா வர்கிஸ் இருவரும் அழகாக இருக்கிறார்கள். நடிப்பு கச்சிதம். செக்யூரிட்டியாக வருகிறவர் கண்களால் லேசாக மிரள வைக்கிறார். ஃ;பைன் ஜான், இயக்குநர் ராம் பிரபா, ராஜ்குமார், தென்றல் ராஜா உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாகச் செய்திருக்கிறார்கள்.

பின்னணி இசையால் வி ஜி ஹரி கிருஷ்ணனும், ஒளிப்பதிவால் சுரேஷ்குமார் சுந்தரமும் படத்தை பலப்படுத்தியிருக்கிறார்கள்.

பெரும்பாலான காட்சிகள் ஒரே வீட்டுக்குள் நடப்பது ஒரு கட்டத்துக்கு மேல் சற்றே சோர்வை உருவாக்குகிறது. எடிட்டர் ராம்நாத்தின் பங்களிப்பில் படத்தின் நீளம் 110 நிமிடங்களுக்குள் அடங்கியிருப்பது ஆறுதல்.

காதலை எதிர்க்கும் அண்ணன், அண்ணனை மீறி காதலனுடன் சேரும் தங்கை என்பது மிகமிக சாதாரண கதைதான். அதற்கு அமைத்திருக்கிற, ஒரு இரவுக்குள் ஒருவரை கொலை செய்ய இரு தரப்பு முயற்சி செய்வதாக விரியும் திரைக்கதையால் ஓரளவுக்கு திக்திக் திரில்லர் அனுபவம் கிடைக்கிறது.

Rating 2.5 / 5

Latest articles

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...

More like this