HomeCinemaமத்திய அரசு ஓடிடி நடத்தும்போது தமிழ்நாடு அரசால் செய்ய முடியாதா? -’சிலம்பம்’ பட விழாவில் இயக்குநர்...

மத்திய அரசு ஓடிடி நடத்தும்போது தமிழ்நாடு அரசால் செய்ய முடியாதா? -’சிலம்பம்’ பட விழாவில் இயக்குநர் மோகன்.ஜி

Published on

ஸ்டண்ட் மாஸ்டர் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி எழுதி இயக்கிய திரைப்படம் ‘சிலம்பம்.’ அறிமுக நடிகர் அஜித் நாயகனாக நடிக்க, வில்லனாக ஹரிஷ் அறிமுகமாகிறார். மெளனிகா ரெட்டி நாயகியாக நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா கடந்த மே 16-ம் தேதி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக நடிகரும், ஸ்டண்ட் மாஸ்டருமான பெப்ஸி விஜயன், இயக்குநர் பேரரசு, பவர் பாண்டியன், இயக்குநர் மோகன்.ஜி, நடிகர் கூல் சுரேஷ், ஸ்டண்ட் யூனியன் தலைவர் கே.அசோக், செயலாளர் சுகுமார், பொருளாளர் ஜான், இயக்குநர் ரவி ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
நிகழ்வில் படத்தின் இயக்குநர் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி பேசுகையில், “இந்த படத்தில் நிறைய சிலம்பம் மாஸ்டர்களை வச்சி பண்ணியிருக்கோம். எழில் மாஸ்டர் அதிகம் ஒத்துழைப்பு கொடுத்தார், ஆதம்பாக்கம் துரை மாஸ்டர், ஜோதி மாஸ்டர் ஆகியோர் அதிகம் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். எனக்கும் ஆசான் பவர் பாண்டியன் மாஸ்டர் தான், என் பிள்ளைகளுக்கும் ஆசான் அவர் தான். இந்தியாவில் இருக்கும் பல முன்னணி ஹீரோக்கள் அவரிடம் தான் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். அவரிடம் பயிற்சி பெற்றவர்கள் அனைவரும் மிகப்பெரிய இடத்துக்கு சென்றிருக்கிறார்கள். ஸ்டண்ட் யூனியன் இருக்கும் சுமார் 600 பேர் அவரிடம் பயிற்சி பெற்றவர்கள் தான். அப்படி ஒருவரிடம் நாங்களும் பயிற்சி பெற்றது பெருமை. ஒழுக்கம் என்ற பாடத்தை அவரிடம் தான் படிக்க வேண்டும். சிலம்பம் என்றாலே ஒழுக்கம் தான், அதையே மிக ஒழுக்கமாக சொல்லிக்கொடுப்பார், அவரை வணங்குகிறேன்.
இந்த படத்தில் சிலம்பம் பயிற்சி பெற்ற 300 பேரை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறோம். சிலரிடம் ஆங்கில வார்த்தையை பயன்படுத்துவார்கள், அதை தவிர்த்துவிட்டு தமிழில் வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறோம். ஒரு காலத்தில், கராத்தே, பாக்ஸிங் பயிற்சிக்கு பிள்ளைகளை தந்தைகள் அழைத்துச் செல்வார்கள், ஆனால் இப்போது சிலம்பம் பயிற்சிக்கு பிள்ளைகளை அவர்களது தாய்மார்கள் தான் அழைத்துச் செல்கிறார்கள். பயிற்சி முடியும் வரை அவர்கள் உடன் இருக்கிறார்கள், அந்த அளவுக்கு சிலம்பம் மீது மக்களுக்கு ஆர்வம் வந்துவிட்டது. இன்று தெருவுக்கு நூறு பேர் சிலம்பம் பயிற்சி பெறுகிறார்கள். இந்தியா அளவில் சிலம்பம் வளர்ந்து இருப்பதோடு, சிலம்பம் வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் அளவுக்கு இந்த கலை உயர்ந்திருக்கிறது.
படத்தின் கதையில் படை பலம், பணம் பலம், அதிகார பலம் அனைத்தையும் வெல்லுகின்ற ஆசானாக சிலம்பரசன் கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருக்கிறார். எப்போ நான் கேமரா முன்பு நிற்பேன், எப்போது பேட்டி கொடுப்பேன் என்று ஏங்கியிருக்கிறேன், சத்தம் போட்டு கத்தியிருக்கிறேன். அப்போது என் மனைவி தான் ஊக்கம் கொடுத்து, ஒரு நாள் நீங்க, கேமரா முன்பு நிற்பீர்கள் என்று நம்பிக்கை கொடுப்பார், அவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படத்திற்காக பல பிரச்சனைகளை கடந்து வந்திருக்கிறேன். ஆனால், நாங்கள் நினைத்தது போல் படம் சிறப்பாக வந்திருக்கிறது. பத்திரிகையாளர்களும், ஊடகத்தினரும் நினைத்தால் தன எங்களை வெளியே தெரிய வைக்க முடியும், நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சிலம்பம் பற்றி பல விசயங்களை இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம், நீங்கள் அனைவரும் திரையரங்கில் படத்தை பார்க்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி” என்றார்.
இயக்குநர் மோகன்.ஜி பேசுகையில், “ஒரு ஸ்டண்ட் கலைஞர் இயக்குநர் ஆவது சாதாரண விசயம் அல்ல, அது பெரிய முயற்சி, அதற்கு துணையாக இருக்க வேண்டும் என்று தான் இங்கே வந்தேன். சிலம்பம் குழுவுக்கு என் வாழ்த்துகள். டிரைலர் பார்த்தேன். ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இருக்கும் விசயங்கள் நமமி விட்டு விலகாமல் இருக்கு, அதில் ஒன்று சிலம்பம், இதற்கு தலைவர் முருகன் கடவுள் தான். சிலம்பம் கலையில் நடக்கும் அரசியல் உள்ளிட்ட பல விசயங்களை எளிய மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள், இதற்கு வாழ்த்துகள்.
சிலம்பம் விளையாட்டில் தேசிய அளவில் வெற்றி பெற்றால் அரசு வேலை இருக்கிறது. இது எத்தனை மாணவர்களுக்கு தெரியும், என்று தெரியவில்லை. சிலம்பம் மிக முக்கியமான விசயம், இந்த தகவல் திரெளபதி படம் பண்ணும் போது தான் தெரியும். அதற்கு பாண்டியன் மாஸ்டர் தான் பயிற்சி கொடுத்தார். மாஸ்டர் திரெளபதி 2 பற்றி கவலை தெரிவித்தார், அது என் தவறு தான். வெளியீட்டு தேதி தவறாக அமைந்துவிட்டது. இப்போது சினிமா இன்புளுயன்ஸர் இடம் சென்று விட்டது. யார் படம் ஓடனும் ஓடக்கூடாது என்பதை அவர்கள் தான் இன்று முடிவு செய்கிறார்கள். முன்பெல்லாம் ஊடகத்தினர் மற்றும் பத்திரிகையாளர்கள் நல்ல விமர்சனங்கள் கொடுத்து படங்களை ஜெயிக்க வைத்தார்கள், இன்று சோசியல் மீடியா இன்புளுயன்ஸர் கிட்ட சென்று விட்டது.
சில படங்களை முடிக்க வேண்டும் என்று முன்கூட்டியே முடிவு செய்து விடுகிறார்கள், அப்படி தான் எனக்கும் நடந்தது. ஆனால், ஓடிடியில் திரெளபதி 2 படத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்று முயற்சிக்கிறேன். இன்று மத்திய அரசின் ஓடிடி ஒன்று இருக்கிறது. அதில் பணம் கொடுக்க மாட்டார்கள், ஆனால் அனைத்து படங்களையும் அதில் ஒளிபரப்பு செய்யலாம். அதுபோல், தமிழ் சினிமாவுக்கு என்று பிரேத்யமான ஒரு ஒடிடி உருவாக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய் சாரிடம் கோரிக்கை வைக்கிறேன். மத்திய அரசு ஓடிடி நடத்தும் போது தமிழ்நாட்டு அரசால் செய்ய முடியாதா. காரணம், சிலம்பம் போன்ற படங்கள் ஓடிடியில் வெளியிட கஷ்டப்பட வேண்டும், அதிலும் ஒரு அரசியல் இருக்கு. இதற்காக யாரும் கவலைப்பட மாட்ராங்க, தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட எந்த சங்கங்களும் இதைப்பற்றி பேசுவதில்லை. கியூபும் அப்படி தான், சிறிய படங்களுக்கு பெரிய கட்டணம் கட்ட வேண்டிய தேவை இல்லை, இருந்தாலும் கட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்க வேண்டும். சிறிய படங்கள் தியேட்டரில் வெளியாவதற்கு 30 லட்சம் செலவு செய்ய வேண்டிய சூழல் இருக்கிறது. 100 தியேட்டருக்குள் வெளியாகும் படங்களுக்கு ஒரு மாணியம் வாங்கி கொடுக்க வேண்டும். இங்கு நிகழ்ச்சி நடத்துவது மகிழ்ச்சியாக இருக்கலாம், ஆனால் இந்த படத்தை தியேட்டருக்கு கொண்டு செல்வது மகிழ்ச்சியாக இருக்காது. எனவே தமிழ்நாடு அரசு ஒடிடி ஒன்றை உருவாக்கி சிறு முதலீட்டார்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சோசியல் மீடியா இன்புளுயன்ஸர் பெரிய குழுவாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள், கண்ணுக்கு தெரியாத அவர்கள் ஒரு படத்தை ஓடாமல் செய்ய பெரிய வேலை செய்கிறார்கள். பணத்திற்காக அவர்கள் இதை செய்துக் கொண்டிருக்கிறார்கள். என் படத்திற்கும் அவர்களால் தான் பாதிப்பு ஏற்பட்டது. எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் தமிழ்நாடு அரசு பிரேத்யமாக ஒடிடி ஒன்றை உருவாக்கி, சிறிய படங்களை வாழ வைக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன். எனவே, சிலம்பம் படத்தில் பணியாற்றியவர்கள் வெற்றி பெற வேண்டும். எனவே இதுபோன்ற சிறிய படங்களுக்கு சிறிய கட்டணம் வாங்கிக்கொண்டு சோசியல் மீடியா இன்புளுயன்ஸர் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சிலம்பம் படமும், படத்தில் பணியாற்றியவர்களும் பெரிய வெற்றி பெற வேண்டும், நன்றி.” என்றார்.

 

Latest articles

மே மாத வெளியீடாக திரைக்கு வருகிறது ரோபோ சங்கர் நடித்துள்ள ‘ஈகோ ராமன்.’

அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரோபோ சங்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'ஈகோ ராமன்.' கதாநாயகனாக சிபி புவனச்சந்திரனும், நாயகியாக...

96, மெய்யழகன் படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சி பிரேம்குமார் இயக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. மலையாள திரையுலகின்...

கருப்பு சினிமா விமர்சனம்

காவல்துறையும் நீதித்துறையும் நேர்மையாக செயல்படுவதில்லை என்கிற மோசமான சூழ்நிலையை மாற்ற கருப்பு சாமி, கருப்பு கோட் அணிகிற கதை. ஒரு...

சட்டென்று மாறுது வானிலை சினிமா விமர்சனம்

கதாநாயகன் அப்பா அம்மாவை இழந்து, ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து, படித்து ஆளாகி, நல்ல வேலையில் இருக்கிறான். அவனுக்கு ஒரு...

More like this

மே மாத வெளியீடாக திரைக்கு வருகிறது ரோபோ சங்கர் நடித்துள்ள ‘ஈகோ ராமன்.’

அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரோபோ சங்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'ஈகோ ராமன்.' கதாநாயகனாக சிபி புவனச்சந்திரனும், நாயகியாக...

96, மெய்யழகன் படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சி பிரேம்குமார் இயக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. மலையாள திரையுலகின்...

கருப்பு சினிமா விமர்சனம்

காவல்துறையும் நீதித்துறையும் நேர்மையாக செயல்படுவதில்லை என்கிற மோசமான சூழ்நிலையை மாற்ற கருப்பு சாமி, கருப்பு கோட் அணிகிற கதை. ஒரு...