HomeCinemaசாத்தான் தி டார்க் சினிமா விமர்சனம்

சாத்தான் தி டார்க் சினிமா விமர்சனம்

Published on

ஹாரர் திரில்லர் ரசிகர்களுக்காகவே தயாராகி திரைக்கு வந்திருக்கும் படம். ஒருசிலர் தவிர முழுக்க முழுக்க புதுமுக நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பில் ‘சாத்தான் தி டார்க்.’

பேய் பிடித்தவர்கள் தாறுமாறாக நடந்து கொள்வது போல, ஒருவித அமானுஷ்ய சக்திக்கு கட்டுப்பட்ட அந்த பெண் தன் மகள்களிடமும், இன்னும் ஒருசிலரிடமும் ரத்தவெறி பிடித்தவர்போல் நடந்து கொள்கிறார். ஊரில் சிலர் மர்மமான முறையில் இறந்து கொண்டிருக்க, அதற்கும் அந்த பெண்ணுக்கும் சம்பந்தம் இருப்பதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள். இறந்தவர்களை போஸ்ட் மார்ட்டம் செய்யலாம் என்று பார்த்தால் அதையும் அமானுஷ்ய சக்தி தடுக்கிறது.

உண்மையில் அந்த பெண்ணுக்கு என்னவாயிற்று? நடக்கும் மரணங்களுக்கு என்ன காரணம்?

நடுங்கவைக்கும் சம்பவங்களுடன் விவரிக்கிறது இயக்குநர் மணிகண்டன் ராமலிங்கத்தின் திரைக்கதை.

சாத்தான் பிடிக்கு ஆளாகி வெறித்தனமாக நடந்துகொள்ளும் போதும், தன் உறுப்புகளை தானே வெட்டிச் சிதைத்து கொள்கிறபோதும் மோனாவின் நடிப்பு மிரட்டலாக இருக்கிறது.

மோனாவின் மகளாக வருகிற ஐரா, அம்மாவின் நிலைமை புரிந்து மன உளைச்சலில் தவிப்பதும், அமானுஷ்ய சக்தியால் தாக்குதலுக்கு ஆளாவதுமாக பயத்தையும் பதற்றத்தையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்திருக்கிறார்.

ஐராவின் காதலனாக வருகிற பிரட்ரிக் ஜேம்ஸ் ஐராவுக்கும், ஐராவின் அம்மாவுக்கும் என்ன நடந்தது என்பதை அலசி ஆராய்ந்து கண்டுபிடிப்பதில் சுறுசுறுப்பு காட்டி கவனம் பெறுகிறார்.

கடவுளை வெறுத்து, சாத்தான் வழிபாட்டுக்குள் நுழைந்து நாக்கை வெட்டிக் கொள்கிற எபிசோடுகளில் சாந்தினி தமிழரசனின் நடிப்பு உடம்புக்குள் உதறலை உருவாக்குகிறது. எட்வர்ட், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோரின் நடிப்பு கச்சிதம்.

ஹாலிவுட் ஹாரர் படங்கள் தருவதுபோன்ற பய உணர்வை பின்னணி இசை மூலம் தந்திருக்கிறார் அஸ்வின் கிருஷ்ணா. பாலா ஜி ராமசாமியின் ஒளிப்பதிவு தரம்.

ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டம், கடவுளை நம்பி பயனில்லை என்ற முடிவுக்கு வருகிறார்கள். கடவுளுக்குப் பதிலாக சாத்தானை வழிபடுகிறார்கள். அதனால் மனிதர்களுக்கு இறப்பு என்பதே இல்லாமல் செய்ய முடியும், இறந்தவர்களுக்கு உயிரூட்ட முடியும் என்று நம்புகிறார்கள். சாத்தானை திருப்திபடுத்த நாக்கை அறுத்து, விரலை வெட்டி என ரத்தம் சிந்தி தங்களைத் துன்புறுத்திக் கொள்கிறார்கள்.

இப்படியெல்லாம் காட்சிகள் விறுவிறுப்படைய, மர்ம மரணமடைந்தவர்களை போஸ்ட் மார்ட்டம் செய்தால், அவர்களுக்கு உடல் ரீதியாக எந்த பிரச்சனையும் இல்லாதிருப்பது, போஸ்ட் மார்ட்டம் செய்த நபர்களின் மூளை துடிப்புடன் இருப்பது என படத்தில் அதிரடியான சம்பவங்களுக்குப் பஞ்சமில்லை.

முன்பாதியில் பள்ளிப்பருவ காதல் அதுஇதுவென வருகிற காட்சிகள் அலுப்பு சலிப்பு தந்தாலும், அதன்பிறகான கதையின் போக்கு அப்படியும் இப்படியும் நகர முடியாதபடி கட்டிப்போடுகிறது.

சாத்தான் தி டார்க் – பயந்து நடுங்க விரும்புகிறவர்களுக்கு நல்ல சாய்ஸ்!

Rating 3.5 / 5

Latest articles

இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும்! -இதயம் முரளி படத்தின் வெற்றி விழாவில் விருப்பம் தெரிவித்த நடிகை கயாது லோகர் 

அதர்வா நடிக்க, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொள்ள...

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ்!

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம்...

மூன்றாம் முறை தேசிய விருது… ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

நேற்று (19 ஜூலை 2026) அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு...

46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய ‘அமரன்’ – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!

இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத...

More like this