HomeMovie Reviewட்ரீம் கேர்ள் சினிமா விமர்சனம்

ட்ரீம் கேர்ள் சினிமா விமர்சனம்

Published on

திரையுலகம் காதல் கதைகளை விதவிதமாக சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் இயக்குநர் எம் ஆர் பாரதி, கனவில் வந்த காதலி நேரில் வந்தால் எப்படியிருக்கும் என சிம்பிளாக யோசித்ததில் பிறந்திருக்கிறாள் ‘ட்ரீம் கேர்ள்.’

திரைப்படம் இயக்குவதற்கான திட்டமிட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணா, தயாரிப்பாளர் கிடைத்து, படம் இயக்குவதற்கான முயற்சியில் இறங்குகிறார். அவர் கதாநாயகியாக தேர்ந்தெடுத்த அஞ்சலி என்ற பெண்ணுடன் நெருங்கிப் பழக அது காதலாக மலர்கிறது. கிருஷ்ணாவை சந்திக்கும் முன் அஞ்சலி ஒருவரை காதலித்துக் கொண்டிருக்கிறார். அந்த காதலர் இப்போது கிருஷ்ணா – அஞ்சலி காதலுக்கு வில்லனாகிறார். அதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை என்றாகிவிடுகிறது. அஞ்சலி விபத்தில் இறக்கிறாள் என்பதுதான் இந்த கதையிலிருக்கிற ஷாக்கான சமாச்சாரம்.

மேலே கதையாக சொன்னதில் ‘திரைப்படம் இயக்குவதற்கான திட்டமிட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணா, தயாரிப்பாளர் கிடைத்து, படம் இயக்குவதற்கான முயற்சியில் இறங்குகிறார்’ என்பது வரைதான் நிஜம். மற்றதெல்லாம் கிருஷ்ணாவின் கனவில் நடந்தவை.

அப்படி நடந்த அனைத்தும் நிஜத்தில் நடக்க, அஞ்சலி விபத்திலிருந்து தப்பிக்க முடிந்ததா இல்லையா என்பது மிச்சசொச்ச கதை…

கிருஷ்ணாவாக வருகிற ஜீவாவுக்கு காதலில் துவங்கி எல்லா உணர்வுகளையும் உணர்ச்சி வசப்படுதல்களையும் இயல்பான நடிப்பில் கொண்டுவர முடிகிறது.

அஞ்சலியாக வருகிற ஹரிஷ்மிதா ஹீரோயினுக்கான அத்தனை அம்சங்களும் பொருந்தியவராக இருக்கிறார். அணியும் உடைகளாலும் வசீகரப் புன்னகையாலும் எளிய நடிப்பாலும் கவனிக்க வைக்கிறார்.

ஆர்ப்பாட்டம் எதுவுமில்லாத காதல் கதைக்குப் பொருத்தமான பின்னணி இசையைத் தந்திருக்கும் இளமாறன் பாடல்களில் தென்றலின் இதத்தை பரவச் செய்கிறார்.

கதை நிகழும் ஊட்டியின் அழகை தவழும் மேகங்களில் வளைந்து நெளிந்து பயணித்து பல மடங்காக்கிக் காட்டியிருக்கிறார் சாலமன் போவாஸ்.

மெல்லிய காதல் கதை, புதுமுகங்களாக இருந்தாலும் கதைக்குப் பொருத்தமான நடிகர், நடிகைகள், இடையிடையே கலகலப்புக்கான காட்சிகள், சஸ்பென்ஸ் திரில்லருக்கான விறுவிறுப்போடு கிளைமாக்ஸை நோக்கி நகர்த்திப் போகும் எம் டி தமிழரசன் குழுவினரின் திரைக்கதை உள்ளிட்டவை படத்திற்கு பலம் சேர்க்கின்றன.

பெரியளவில் எதிர்பார்ப்பின்றி போனால் ஒன்றரை மணி நேரம் ஓடி முடிகிற இந்த படத்தில் ரசிக்கும்படியான அம்சங்களை அனுபவித்து திரும்பலாம்.

Rating 3 / 5 

Latest articles

தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள்… ஜூரியாக செயல்பட்ட டான்ஸ் மாஸ்டர் கலா & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

தனுஷ் இயக்கிய படத்துக்கும் தனுஷ் நடித்த படத்துக்கும் தேசிய விருது… தேர்வுக் குழுவில் இடம் பெற்ற நடன இயக்குநர் கலா மாஸ்டர் & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

மங்கேஷ் தகாடேவின் இசை, ரிச்சா ஷர்மாவின் ஆன்மாவைத் தொடும் குரல், ஷகீல் அசாமியின் அர்த்தமுள்ள வரிகள்… ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்திலிருந்து வெளியானது ‘நீ செல்’ பாடல்!

https://www.youtube.com/watch?v=8JofRnEai6s ZEE  Studios  வழங்க, MIG Production இணைந்து தயாரித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ...

ஜூலை 17; 2026 முதல் குழந்தைகளுக்கான Shivlok Ke Kundakka Mandakka புதிய புராண அனிமேஷன் தொடரை ஒளிபரப்பும் ZEE 5… 

https://www.youtube.com/watch?v=0KSXQAy2GgY குழந்தைகளுக்கான பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் குற்றவுணர்வில்லாத (Guilt-Free) திரை நேர அனுபவத்தை வழங்கும் பிரபல தளமான KidZ on...

More like this