HomeCinemaSTR ரசிகர்களுக்கு கொண்டாட்டம்... சிலம்பாட்டம் பிப்ரவரி 6-ம் தேதி ரீ ரிலீஸ்!

STR ரசிகர்களுக்கு கொண்டாட்டம்… சிலம்பாட்டம் பிப்ரவரி 6-ம் தேதி ரீ ரிலீஸ்!

Published on

STR பிறந்தநாளைத் தொடர்ந்து அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், சிலம்பாட்டம் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது. 2008ஆம் ஆண்டு வெளியான இந்த ஆக்‌ஷன்–மாஸ் படம், சிம்புவின் கேரியரில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. கிராமத்து எளிமையும், நகரத்து ஸ்டைலும் கலந்து இரட்டை வேடங்களில் சிம்பு மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது.

லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் கே.முரளிதரன், வி.சுவாமிநாதன், டி.எஸ்.ரங்கராஜன் தாயாரிப்பில், 2008ஆம் ஆண்டு வெளியான போது நல்ல வசூலும், ரசிகர்கள் ஆதரவும் பெற்ற “சிலம்பாட்டம்”, காலப்போக்கில் சிம்புவின் கல்ட் படங்களில் ஒன்றாக மாறியது. இன்றைய டிஜிட்டல் காலத்திற்கு ஏற்ப, மேம்படுத்தப்பட்ட ஒலி – படத்தரத்தில், புத்தம் புது பொலிவுடன் இந்த படம் மீண்டும் திரைக்கு வரவிருப்பது STR ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்

சிலம்பரசன் (STR) இந்தப் படத்தில் “தமிழரசன்” மற்றும் “விச்சு” என்ற இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடித்தது ரசிகர்களால் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக கிராமத்து பின்னணியில், சிலம்பக் கலையை அடிப்படையாகக் கொண்டு அமைந்த ஆக்‌ஷன் காட்சிகள், சிம்புவின் உடல் மொழி, டயலாக் டெலிவரி ஆகியவை படத்திற்கு தனி அடையாளம் கொடுத்தன.

இயக்குநர் S சரவணன் இயக்கத்தில் உருவான “சிலம்பாட்டம்” படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவின் இசை பெரிய பலமாக அமைந்தது. “சிலம்பாட்டம்” டைட்டில் பாடல் முதல் மெலடி, குத்து பாடல்கள் வரை அனைத்தும் அப்போது ஹிட் லிஸ்டில் இருந்தன. சிம்புவுடன் இணைந்து சிநேகா, சந்தானம், சானாகான் ஆகியோர் நடித்திருந்தனர். வில்லன் கதாபாத்திரங்கள், உணர்ச்சிப் பூர்வமான அம்மா–மகன் சென்டிமெண்ட், கிராமத்து அரசியல் என பல அம்சங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி எல்மா பிக்சர்ஸ் எத்தில் ராஜ் “சிலம்பாட்டம்” படத்தை ரீ-ரிலீஸ் செய்கிறார்.

மாஸ் சிம்பு, ஆக்‌ஷன் சிம்பு, கிராமத்து சிம்பு—அனைத்தையும் ஒரே படத்தில் காண விரும்பும் ரசிகர்களுக்கு, “சிலம்பாட்டம்” ரீ-ரிலீஸ் ஒரு திருவிழா அனுபவமாக இருக்கும்.

Latest articles

தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள்… ஜூரியாக செயல்பட்ட டான்ஸ் மாஸ்டர் கலா & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

தனுஷ் இயக்கிய படத்துக்கும் தனுஷ் நடித்த படத்துக்கும் தேசிய விருது… தேர்வுக் குழுவில் இடம் பெற்ற நடன இயக்குநர் கலா மாஸ்டர் & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

மங்கேஷ் தகாடேவின் இசை, ரிச்சா ஷர்மாவின் ஆன்மாவைத் தொடும் குரல், ஷகீல் அசாமியின் அர்த்தமுள்ள வரிகள்… ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்திலிருந்து வெளியானது ‘நீ செல்’ பாடல்!

https://www.youtube.com/watch?v=8JofRnEai6s ZEE  Studios  வழங்க, MIG Production இணைந்து தயாரித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ...

ஜூலை 17; 2026 முதல் குழந்தைகளுக்கான Shivlok Ke Kundakka Mandakka புதிய புராண அனிமேஷன் தொடரை ஒளிபரப்பும் ZEE 5… 

https://www.youtube.com/watch?v=0KSXQAy2GgY குழந்தைகளுக்கான பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் குற்றவுணர்வில்லாத (Guilt-Free) திரை நேர அனுபவத்தை வழங்கும் பிரபல தளமான KidZ on...

More like this