விக்ரம் பிரபு & எல் கே அக்ஷய் குமார் நடித்திருக்கும் படம் சிறை.
டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் சந்தித்த உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார்.
முற்றிலும் மாறுபட்ட களத்தில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த படத்திலிருந்து மன்னிச்சிரு என்று தொடங்கும் பாடல் இன்று வெளியானது.
பாடலில் நாயகன் விக்ரம் பிரபு நாயகி அனந்தாவும் நடித்துள்ளார்கள்.
இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பாடல் வரிகளையும் எழுதியுள்ளார்.
சத்ய பிரகாஷ் மற்றும் ஆனந்தி ஜோஷி இப்பாடலை பாடியிருக்கிறார்கள். படத்தின் பாடல் காட்சிகள் வேலூரில் படமாக்கப்பட்டுள்ளது.

