HomeCinemaமகளிர் உலக கோப்பை வெற்றிக்குப் பின், முதன் முறையாக சென்னை சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப...

மகளிர் உலக கோப்பை வெற்றிக்குப் பின், முதன் முறையாக சென்னை சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வருகை தந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்!

Published on

இந்திய நாடே போற்றிய மாபெரும் உலகக் கோப்பை வெற்றிக்கு பின், முதன்முறையாக, சென்னை சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வருகை புரிந்துள்ள, இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பிரம்மாண்ட பிக்கில் பால் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.

சமீபத்தில் உலகின் பலமான 8 அணிகள் கலந்துகொண்ட உலககோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில், அசத்தலாக விளையாடியதுடன், அணியை வழிநடத்தி, இந்தியா மகளிர் அணிக்கு முதல் உலககோப்பையை பெற்றுத் தந்து, இந்தியாவிற்கே பெருமை சேர்த்தவர் இந்திய மகளிர் அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் கவுர்.

இந்தியாவெங்கும் மகளிருக்கு முன்னுதாரண முகமாக மாறியுள்ள ஹர்மன்ப்ரீத் கவுர், உலகக் கோப்பையின் வெற்றிக்குப் பிறகு, முதன்முறையாக சென்னை வருகை புரிந்துள்ள நிலையில், சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு சென்று பல்கலைக்கழகத்தின் வேந்தர் Dr. மரியாசீனா ஜான்சன் மற்றும் பல்கலைக்கழகத்தின் தலைவர் Dr. மரி ஜான்சன் ஆகியோரை சந்தித்து உரையாடினார்.

தமிழகத்தில் 38 வருடங்களாக கல்விச்சேவையில் புகழ்பெற்று விளங்கும் சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், இந்தியாவிலேயே மிகப்பிரம்மாண்டமான பிக்கில் பால் (Pickle Ball) போட்டியை நடத்துகிறது. மிக உயர்தர வசதியுடன் தயாரிக்கப்பட்ட 6 உள்விளையாட்டரங்கத்தில், அனைத்து வயதினரும் கலந்து கொள்ளும் வகையில் இப்போட்டிகள் இன்று மதியம் நடத்தப்படவுள்ளது.

விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில், இந்த பிரம்மாண்ட நிகழ்வில் ஹர்மன்ப்ரீத் கவுர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

Latest articles

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...

More like this