HomeCinemaசென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள, ஆன்லைன் போலி ஷேர் மார்க்கெட் மோசடிகள் பற்றிய விழிப்புணர்வு பாடல்!

சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள, ஆன்லைன் போலி ஷேர் மார்க்கெட் மோசடிகள் பற்றிய விழிப்புணர்வு பாடல்!

Published on

ஆன்லைன் வழியாக நடைபெறும் பல்வேறு நிதி மோசடிகளைத் தடுக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சென்னை பெருநகர காவல் தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

https://www.instagram.com/reel/DQRK6_iiaMS/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

இதன் ஒரு பகுதியாக, தற்போது Online Fake Share Market Scams குறித்து மக்களுக்கு எளிமையாக புரியும் விதத்தில் ஒரு புதிய விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பாடலில், பிரபல நடிகர் காளி வெங்கட் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், டீசல் படத்தின் ‘பீர் பாடல்’ மூலம் மக்கள் மனதில் இடம் பெற்ற கானா குணா இப்பாடலை பாடி இருக்கிறார்.

இந்த விழிப்புணர்வு பாடல் மூலம், போலியான ஷேர் மார்க்கெட் முதலீட்டு தளங்களின் காட்சிகள், அவை மக்களை எவ்வாறு ஏமாற்றி பணத்தை பறிக்கின்றன என்பதைக் காட்டி, மக்கள் அதுபோன்ற ஆன்லைன் மோசடிகளில் சிக்காமல் இருக்க எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு சென்னை பெருநகர காவல் துறையினர், நடிகர்கள் அஷோக் செல்வன் மற்றும் ரமேஷ் திலக் நடித்த ஓ மை கடவுளே திரைப்படக் காட்சிகளை போலவே ஒரு விழிப்புணர்வு விளம்பரம் வெளியிட்டது. அதில் Online Investment Scams குறித்து எச்சரிக்கை அளிக்கப்பட்டது.

அந்த வீடியோ மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, சுமார் 1 கோடி பார்வைகளை கடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய பாடல் வெளியீட்டின் மூலம், சென்னை பெருநகர காவல் பொதுமக்களிடம் மீண்டும் ஒருமுறை, “ஆன்லைன் வழியாக ‘மிகுந்த லாபம் தரும் முதலீடு’, ‘உடனடி வருமானம்’, அல்லது ‘பங்குச் சந்தை நிபுணர்கள்’ என கூறி வரும் போலி தளங்கள் மற்றும் நபர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம்.

உங்கள் கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை இழப்பதிலிருந்து பாதுகாக்க, எச்சரிக்கையாக இருங்கள்” என அறிவுறுத்துகின்றனர்.

பொதுமக்கள் அனைவரும் இதனைப் பார்த்து, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமும் பகிர்ந்து, ஆன்லைன் மோசடிகளிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு சென்னை பெருநகர காவல் கேட்டுக்கொள்கிறது.

Latest articles

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...

More like this