HomeMovie Reviewசொட்ட சொட்ட நனையுது சினிமா விமர்சனம்

சொட்ட சொட்ட நனையுது சினிமா விமர்சனம்

Published on

கல்யாண வயதிலிருக்கும் கதைநாயகன் ராஜாவுக்கு பெண் தேடுகிறார்கள். எந்த பெண்ணுமே அவனை ஏற்கவில்லை. காரணம் அவனது சொட்டத் தலை.

மனம் தளராமல் பெண் தேடுவதை தொடர, ஒரு பெண்ணுக்கு அவனை பிடித்துப் போகிறது. கல்யாணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வருகிறார்கள். அந்த நேரமாகப் பார்த்து அந்த பெண்ணைப் பற்றிய அதிர்ச்சியான மேட்டர் ஒன்று தெரியவர, கல்யாணம் நின்று போகிறது.

மனம் வெறுத்துப் போகும் ராஜா, சொட்டத் தலையோடு பெண் தேடினால் வேலைக்கு ஆகாது என்ற முடிவுக்கு வருகிறான். தலையில் செயற்கை முடியோடு அதாவது ‘விக்’கோடு பெண் பார்க்க கிளம்புகிறான். ரீல்ஸில் கலக்கும் ஒரு பெண் கிடைக்கிறாள். அவளுடன் கல்யாணம் நிச்சயமாகிறது.

அந்த கல்யாணம் நடந்ததா இல்லையா என்பது மீதிக் கதை…

சொட்டத் தலையர்கள் சந்திக்கும் அத்தனை கேலி கிண்டல்களையும் அனுபவிப்பது,  பெண் தேடிப் போகும் இடத்தில் அவமானத்தை சந்திப்பது, தன்னைப் பிடித்ததாக சொன்ன பெண்ணிடம் நேரத்தை மகிழ்ச்சியாக செலவிட காத்திருப்பது, அந்த பெண் தவறானவள் என தெரியும்போது கொதித்துக் கொந்தளிப்பது, அடுத்ததாக சொட்டத்தலையை மறைத்ததால் செட்டான பெண்ணுடன் ரீல்ஸ் அது இதுவென உற்சாகமாக இருப்பது என தனது பங்களிப்பை குறையின்றிச் செய்திருக்கிறார் கதைநாயகன் நிஷாந்த் ரூசோ.

நிஷாந்தை சொட்டத் தலையோடு ஏற்றுக் கொள்ள முன்வருகிற ஷாலினி ஹோம்லி லுக்கால் கவர, அவர் விக் வைத்திருப்பது தெரியாமல் கல்யாணத்துக்கு சம்மதிக்கிற பிக்பாஸ் வர்ஷினி வெங்கட் தன்னைச் சுற்றி நடக்கிற எல்லாவற்றையும் ரீல்ஸ் வீடியோவாக மாற்றுகிற போக்கு ரசிக்க வைக்கிறது.

ரோபோ சங்கர், கே பி ஒய் யோகி, கே பி ஒய் ராஜா, கே பி ஒய் பிரேம், ஷேக் ஃபரீத், ஆனந்த் பாண்டி உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை குறையின்றிச் செய்திருக்கிறார்கள்.

ரெஞ்சித் உன்னி இசையில் பாடல்கள் ஒருமுறை கேட்கும் ரகம். பின்னணி இசை அளவுக்கதிக அதிரடி நிகழ்த்தியிருக்கிறது.

தனது கேமராவில் காட்சிகளை கலர்ஃபுல்லாக கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரயீஷ்.

வழுக்கைத் தலை என்பது சகஜமானதுதான் என்றாலும் அப்படி வழுக்கைத் தலையர்களாக வாழ்பவர்கள் சந்திக்கிற பிரச்சனைகள் ஏராளம். அதில் சிலவற்றை  காமெடியாக தொகுத்து தந்து ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் நவீத் எஸ் ஃபரீத். அந்த முயற்சியை வரவேற்கலாம்; மதிப்பெண் தருவதென்றால் காமெடி என்ற பெயரில் அடித்திருக்கும் கூத்துக்கு பாஸ்மார்க் மட்டுமே தரலாம்.

Rating 3 / 5

Latest articles

இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும்! -இதயம் முரளி படத்தின் வெற்றி விழாவில் விருப்பம் தெரிவித்த நடிகை கயாது லோகர் 

அதர்வா நடிக்க, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொள்ள...

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ்!

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம்...

மூன்றாம் முறை தேசிய விருது… ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

நேற்று (19 ஜூலை 2026) அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு...

46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய ‘அமரன்’ – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!

இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத...

More like this