HomeCinemaபெரியளவில் வெற்றியடைந்த ‘சட்டமும் நீதியும்' வெப் சீரிஸ்... உற்சாகமாக நடந்த கொண்டாட்டம்!

பெரியளவில் வெற்றியடைந்த ‘சட்டமும் நீதியும்’ வெப் சீரிஸ்… உற்சாகமாக நடந்த கொண்டாட்டம்!

Published on

நடிகர் சரவணன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நீதிமன்ற வழக்கின் பின்னணியில் உருவாகி ZEE5 தளத்தில் கடந்த ஜூலை 18-ல் வெளியான வெப் சீரிஸ் ‘சட்டமும் நீதியும்.’

இந்த சீரிஸ் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்துள்ளது. வெளியான வேகத்தில் 51 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

அதையடுத்து சீரிஸின் வெற்றி விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் பேசிய நடிகர் சரவணன், ”சட்டமும் நீதியும் இவ்வளவு உயரம் சென்றதற்கு காரணமான பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. 90 களில் நான் ஹீரோவாக வந்த போது, அத்தனை பத்திரிக்கையாளர்களும் மிகப்பெரிய ஆதரவு தந்தார்கள். இந்த சீரிஸ் வெற்றிபெற்ற பிறகும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பிரபாகரனுக்கு அவர் மனைவிக்கும் என் நன்றி. என்னுடன் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இப்போது தெலுங்கிலும் இது டாப்பாகி கொண்டிருப்பது மகிழ்ச்சி. இந்த வெற்றிக்கு காரணமான பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு மீண்டும் நன்றி” என்றார்.

இயக்குநர் பாலாஜி செல்வராஜ், ”பத்திரிக்கை சினிமா ஊடகங்களுக்கு நன்றி. சூரி அண்ணா தான் இந்தக் கதையை எடுத்துத் தந்து, இந்த வாய்ப்பை வாங்கித் தந்தார். தயாரிப்பாளர் பிரபாகரன், சசிகலா பிரபாகரன் இருவரும் இந்த சீரிஸிற்காக அவ்வளவு உழைத்துள்ளார்கள். சரவணன் சார் அவரை கம்படபிளாக வைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்தோம், ஆனால் அவர் தான் எங்களை பார்த்துக்கொண்டார் அவருக்கு நன்றி. நம்ரிதா அருமையாக நடித்துத் தந்தார். என் நண்பர் கேமராமேன் கோகுல், இசையமைப்பாளர், எடிட்டர் எல்லோருக்கும் நன்றி, இந்த படைப்பை வெற்றியாக்கித் தந்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகை நம்ரிதா, ”மீடியா நண்பர்களுக்கு நன்றி. இதை நல்ல அனுபவமாக மாற்றியது நீங்கள் தான். எங்களுக்கு ஆதரவு தந்த கௌஷிக் சாருக்கு நன்றி. பாலாஜி சார் இதை அருமையாக எடுத்ததற்கு நன்றி. பிரபாகர் சார் இப்போது வரை உழைத்துக் கொண்டுள்ளார். சரவணன் சார் மிகச்சிறந்த மனிதர் அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. எங்களுடன் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. எல்லோருக்கும் நன்றி” என்றார்.

Latest articles

இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும்! -இதயம் முரளி படத்தின் வெற்றி விழாவில் விருப்பம் தெரிவித்த நடிகை கயாது லோகர் 

அதர்வா நடிக்க, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொள்ள...

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ்!

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம்...

மூன்றாம் முறை தேசிய விருது… ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

நேற்று (19 ஜூலை 2026) அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு...

46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய ‘அமரன்’ – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!

இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத...

More like this