HomeCinemaடிரெய்லர் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது! -தன் உதவி இயக்குநர் கௌதம் கணபதி இயக்கியுள்ள சரண்டர்...

டிரெய்லர் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது! -தன் உதவி இயக்குநர் கௌதம் கணபதி இயக்கியுள்ள சரண்டர் பட விழாவில் இயக்குநர் ஈரம் அறிவழகன் பெருமிதம் 

Published on

அறிமுக இயக்குநர் கௌதம் கணபதி இயக்கத்தில், தர்ஷன் நாயகனாக நடிக்க, காவல்துறை பின்னணியில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் ‘சரண்டர்.’

இந்த படம் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் இயக்குநர் கௌதம் கணபதி, ”இது எனக்கு முதல் மேடை, என் குரு அறிவழகன் சார் இங்கு வந்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. இப்படத்தை மிக நேர்மையாக எடுத்துள்ளோம். படத்தில் பாட்டு இல்லை, தேவைப்படவில்லை, தர்ஷனும் எனக்கு இது மாதிரி வேண்டும் என எதையுமே கேட்கவில்லை. கேமராமேன், எடிட்டர், இசை என எல்லாமே அறிவழகன் சாரிடமிருந்து வந்தவர்கள் தான். ஒரு டீமாக எல்லோரும் உழைத்துள்ளோம். படம் மிக நேர்த்தியாக வந்துள்ளது. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி’ என்றார்.

நடிகர் தர்ஷன் ”இங்கு வாழ்த்த வந்துள்ள அனைவருக்கும் நன்றி. கௌதம் சாருக்கு நன்றி, அவர் எப்போதும் என்னை மிகப்பெரிய ஹீரோ போல தான் நடத்தினார். எனக்காக என்னுடன் எப்போதும் நிற்கிறார். தயாரிப்பாளர் குமார் சார் ஒரு கதையை நம்பி, புது டீமை நம்பி, இவ்வளவு செலவு செய்து படம் செய்துள்ளார். அவருக்கு நன்றி. நாங்கள் ஷூட்டில் எவ்வளவு டிஸ்கஸ் செய்தாலும் ரேணுவிடமும் கேட்டுக்கொள்வோம் என்று சொல்வார்கள். அவர் நாங்கள் என்ன எடுத்தாலும் பெரிதாகப் பாராட்ட மாட்டார். ஓகே என்று தான் சொல்வார். எனக்கு இப்போது புதிதாக கதை சொல்ல வந்தவர்கள் அவர் தான் என்னை ரெஃபர் செய்ததாகச் சொன்னார்கள் நன்றி சார்.

என்னை அழகாகக் காட்டிய கேமராமேனனுக்கு நன்றி. மன்சூர் அலிகான் போல ஒரு சீனியர் ஆக்டருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. அவரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன். படத்தில் எல்லோரும் கடின உழைப்பைத் தந்துள்ளனர். என்னை மக்களிடம் சேர்த்த பத்திரிகை நண்பர்கள் இப்படத்தையும் சேர்த்து விடுங்கள் நன்றி” என்றார்.

நடிகர் மன்சூர் அலிகான், ”இயக்குனர் கௌதம், ஈரம் அன்பழகனிடமிருந்து வந்து இப்படத்தை எடுத்துள்ளார். மிக அற்புதமாக இப்படத்தை எடுத்துள்ளார். செட் எல்லாம் அப்படியே ஒரிஜினலாக இருந்தது. தர்ஷன் அருமையாக நடித்துள்ளார். இந்த மாதிரி புதியவர்களை ஊக்குவிக்கும் தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துகள். சினிமாவில் தொடர்ந்து ஒரே மாதிரி படங்கள் மட்டுமே வருகிறது அது மக்களுக்கு போரடிக்கிறது. அவர்களுக்கு வித்தியாசமான படங்களைக் கலைஞர்கள் தர வேண்டும். அதே மாதிரியான படமாக சரண்டர் சரியான நேரத்திற்கு வருகிறது. இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்.

இயக்குநர் ஈரம் அறிவழகன் ”என்னுடைய உதவி இயக்குனர் கௌதம் இயக்கியுள்ள படம் சரண்டர். இந்த மொத்த குழுவும் என்னுடன் வேலை செய்தவர்கள் தான், இவர்களுக்கு வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் குமார் அவர்களுக்கு நன்றி. டிரெய்லர் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. மனோஜ் சப்தம் படம் செய்தவர். இப்படத்தில் மிக நேர்த்தியாகச் செய்துள்ளார். எடிட்டர் ரேணு என் எடிட்டர் சாபுவின் அஸிஸ்டெண்ட். மிக நுணுக்கமாகப் படத்திற்கு என்ன தேவையோ அதைச் சிறப்பாகச் செய்பவர். இப்படத்திலும் சிறப்பாகச் செய்துள்ளார். ஸ்டண்ட் மாஸ்டர் சிறப்பாகச் செய்துள்ளார்.

இசையமைப்பாளர் விகாஷ் படிஸா தமிழ் ராக்கர்ஸ் செய்தார். அவர் என்னிடம் அறிமுகமானபோது, முதலில் ஒரு டிராக் செய்யுங்கள் எனக் கேட்டேன், அதிலேயே அசத்திவிட்டார். மிகத்திறமைசாலி. படத்திற்கான முழு உழைப்பை எப்போதும் தந்துவிடுவார். தர்ஷன் அவர் வந்த பிக்பாஸ் தான் நான் முழுமையாகப் பார்த்தது. நான் லவ் சப்ஜெக்ட் எடுத்தால் அவரை ஹீரோவாக போட வேண்டும் என நினைத்தேன். கௌதம் அவரை இப்படத்தில் நடிக்க வைத்தது மகிழ்ச்சி. கௌதம் மிகச்சிறப்பான ஒரு படத்தைத் தந்துள்ளார் அனைவரும் ஆதரவு தாருங்கள். படம் வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்.

 

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...