HomeCinemaதமிழில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர் பல்டி படம் மூலம் மலையாளத்தில் இசையமைப்பாளராக...

தமிழில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர் பல்டி படம் மூலம் மலையாளத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்!

Published on

ஆல்பம் பாடல்களான ‘கச்சி சேரா’, ‘ஆச கூடா’, ‘சித்திர புத்திரி’ போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார்.

முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் பல படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், தற்போது ஷேன் நிகாமின் 25வது படமான ‘பல்டி’ படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

இத்திரைப்படம் இயக்குநர் உன்னி சிவலிங்கம் என்பவரின் அறிமுக முயற்சியாகவும், இசைக்கும் , ஆக்‌ஷனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படமாகவும் உருவாகி வருகிறது. மேலும் வரும் திருவோண பண்டிகை வெளியீடாக இப்படம் வெளியாகவுள்ளது. இப்படம் அதிரடி ஆக்சன் களத்தில், பெரும் பொருட்செலவில், பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.

சாய் அபயங்கர் இப்படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடதக்கது. இதற்காக வெளியான ஒரு பிரத்யேக ப்ரோமோ வீடியோவில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரு போன் கால் மூலம் சாய் அபயங்கரை மலையாள திரையுலகிற்கு வரவேற்கும் காட்சி ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது. வீடியோவின் முடிவில் “பல்டி ஓணம்” எனும் வாழ்த்தும், சாய் அபயங்கரின் பெயர் பொறித்துள்ள “பல்டி ஜெர்ஸி”யுடன் மோகன்லாலின் வாழ்த்தும் இடம் பிடித்திருப்பது ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளது.

சாய் அபயங்கர் பிரபல பின்னணிப் பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. யூட்யூபில் மட்டும் 200 மில்லியன் பார்வைகளை கடந்த அவரது ஆல்பம் பாடல்கள், இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இப்போது மலையாள சினிமாவில் கலக்கலாக கால் பதித்திருக்கும் சாய், தற்போது தமிழ் சினிமாவிலும் முன்னணி இசையமைப்பாளராக கலக்கி வருகிறார். முன்னணி நட்சத்திரங்களின் படங்களான ‘சூர்யா 45’ (சூர்யா நடிப்பில்), ‘ STR 49 ‘ (சிலம்பரசன் நடிப்பில்), ‘டூயூட்’- DUDE ‘(பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்), லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ‘பென்ஸ்’ ஆகிய படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

“பல்டி” படத்தினை தயாரிப்பாளர்கள் சந்தோஷ் T. குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர், STK Frames மற்றும் Binu George Alexander Productions நிறுவனங்கள் சார்பில் இணைந்து தயாரிக்கின்றனர். இசை மற்றும் ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் அளித்துள்ள இப்படத்தில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றுகின்றனர்.

Latest articles

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...

More like this