HomeCinemaயுனிக் ஸ்டார் நிகில் பிறந்தநாளில் 'சுயம்பு' படத்தின் மேஸிவ் போஸ்டர் வெளியானது!

யுனிக் ஸ்டார் நிகில் பிறந்தநாளில் ‘சுயம்பு’ படத்தின் மேஸிவ் போஸ்டர் வெளியானது!

Published on

பிக்சல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில், யுனிக் ஸ்டார் நிகில் நடிக்கும் ‘சுயம்பு’ படத்தின் மேஸிவ் போஸ்டர் நிகில் பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது!

யுனிக் ஸ்டார் நிகில் ‘கார்த்திகேயா 2’ படத்திற்கு பிறகு தேசிய அளவிலும் பான் இந்தியா அளவிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இப்பொழுது மற்றொரு பான் இந்திய படமான ‘சுயம்பு’ இவரது இருபதாவது படமாக உருவாகிறது.

ஹிஸ்டாரிக்கல் ஆக்ஷன் எபெக்ட் படமாக இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில், இந்தப் படம் மிக பிரம்மாண்டமாக உருவாகிறது. நடிகர் நிகில் இதற்கு முன்பு பார்த்திராத கதாபாத்திரத்தில் வலுவான போர் வீரராக நடிக்கிறார்.
நபா நடேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.

போர் பின்னணியில் செங்கோல் ஏந்தியபடி நிகில் மற்றும் சம்யுக்தா இருவரும் இருக்கும்படி ‘சுயம்பு’ படக்குழு மாஸ் போஸ்டர் ஒன்றை நிகில் பிறந்தநாளன்று வெளியிட்டுள்ளது.

இந்த போஸ்டரில் நிகில் தீவிரமாகவும் வலுவானவராகவும் போர்க்களத்தின் நடுவில் வாளேந்தி நிற்கிறார். வில் மற்றும் அம்புடன் சம்யுக்தாவும் வீரப்பெண்மணியாக இந்த போஸ்டரில் இருக்கிறார். இந்த போஸ்டரே படம் எந்தளவுக்கு பிரம்மாண்டமாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.

சக்தி மற்றும் நீதியின் சின்னம் தான் செங்கோல். பண்டைய ராஜ்ஜியங்கள் முதல் இந்தியாவின் சுதந்திரம் வரை செங்கோல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. நமது பண்டைய வரலாற்றின் படி, ராமர் தனது ஆட்சியின் போது செங்கோல் வைத்திருந்தார். நீதியுடன் நடக்கும் ஆட்சிக்கு இது முன்னுதாரணமாக அமைந்தது.

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் செங்கோலை நிலைநாட்டினார்.

தற்போது ‘சுயம்பு’ திரைப்படமும் இந்த வலுவான கதைக்களத்தை சுற்றியே அமைந்துள்ளது. வரவிருக்கும் டீசர் இந்த உலகத்தை இன்னும் விரிவாகக் காட்டவிருக்கிறது.

இந்த படத்தை புவன் மற்றும் ஸ்ரீகர் இருவரும் இணைந்து பிக்சல் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் தயாரிக்கின்றனர். தாகூர் மது இந்த படத்தை வழங்குகிறார்.

Latest articles

இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும்! -இதயம் முரளி படத்தின் வெற்றி விழாவில் விருப்பம் தெரிவித்த நடிகை கயாது லோகர் 

அதர்வா நடிக்க, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொள்ள...

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ்!

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம்...

மூன்றாம் முறை தேசிய விருது… ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

நேற்று (19 ஜூலை 2026) அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு...

46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய ‘அமரன்’ – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!

இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத...

More like this