Tuesday, June 17, 2025
spot_img
HomeCinemaசூர்யா _ வெங்கி அட்லூரி இணையும் படம் பூஜையுடன் துவங்கியது!

சூர்யா _ வெங்கி அட்லூரி இணையும் படம் பூஜையுடன் துவங்கியது!

Published on

சூர்யா நடிக்க, வெங்கி அட்லூரி இயக்கும் ‘சூர்யா 46’ என தலைப்பிடப்பட்ட திரைப்படத்தின் தொடக்க விழா பிரமாண்டமான பூஜையுடன் ஹைதராபாத்தில் நடைபெற்றது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இந்த படம் பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் உருவான ‘ சார் /வாத்தி’ , ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய சமீபத்திய படங்கள் தொடர்ச்சியான வெற்றியை பெற்றிருக்கிறது. தனது தனித்துவமான கதை சொல்லலுக்கு பெயர் பெற்ற வெங்கி அட்லூரி- தற்போது சூர்யாவுடன் கரம் கோர்க்கிறார். இயல்பான படைப்பிலிருந்து மாறி, அசாதாரணமானதாக இருக்கும் என்று உறுதி அளிக்கும் வகையில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்புகளை அவர் அதிகரிக்கிறார்.

‘பிரேமலு ‘ படத்தின் மூலம் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகையான மமீதா பைஜூ கதாநாயகியாக இணைகிறார். இவருடன் ரவீனா டாண்டன் தெலுங்கு சினிமாவில் மீண்டும் மறுபிரவேசம் செய்கிறார். இவர்களுடன் ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தேசிய விருதைப் பெற்ற ஜீ.வி. பிரகாஷ் குமார் மீண்டும் ஒரு இசை அனுபவத்தை வழங்குவதற்காக வெங்கி அட்லூரியுடன் இணைந்திருக்கிறார்.

படத்தின் ஒளிப்பதிவை நிமிஷ் ரவி மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை நவீன் நூலி கவனிக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை பங்களான் ஏற்றுக் கொள்கிறார். இந்த திரைப்படத்தை வெற்றிகரமான திரைப்படங்கள் மற்றும் தரமான திரைப்படத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட தயாரிப்பாளர்கள் எஸ். நாகவம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

2026 ஆம் ஆண்டில் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு மே மாத இறுதியில் தொடங்குகிறது.

Latest articles

பிக்பாக்கெட் படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்து வாழ்த்திய புதுச்சேரி முதலமைச்சர்!

'பிக் பாக்கெட்' என்ற படத்தை, ஓ.டி.டியில் வெளியாகி பிரபலமான ரிவால்வர் படத்தை இயக்கிய ஜெ எஸ் ஜூபேர் அகமத்...

கண்ணப்பா திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்த நடிகர் ரஜினிகாந்த்!

தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த்...

தேசிய விருது வென்ற பிரியாமணி, ஆளுமையான நடிகை ரேவதி கூட்டணியின் ‘குட் வைஃப்’ தொடரின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டது!

தேசிய விருது வென்ற நடிகை பிரியாமணி மற்றும் திறமையான நடிகர் சம்பத் ராஜ் நடித்திருக்கும் இணைய தொடர் ‘குட்...

More like this

error: Content is protected !!