HomeCinema‘நேச்சுரல் ஸ்டார்' நானி, இயக்குநர் எஸ் ஜே சூரியா நடிக்கும் 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தின் படப்பிடிப்பு...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி, இயக்குநர் எஸ் ஜே சூரியா நடிக்கும் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! நவராத்திரி திருவிழாவில் உற்சாகம்.

Published on

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி மற்றும் திறமையான இயக்குநர் விவேக் ஆத்ரேயா இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். இந்த கூட்டணியின் முதல் திரைப்படமான ‘அந்தே சுந்தரனிகி’ முழு நீள பொழுதுபோக்கு திரைப்படமாக இருந்தாலும், இரண்டாவது படைப்பான ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஒரு தனித்துவமிக்க அதிரடி மற்றும் மாஸான ஆக்சன் அவதாரத்தில் நானி வழங்கிய அன்செயின்ட் Unchained எனும் வீடியோ மக்களை உற்சாகப்படுத்தியது.

டி வி வி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் சார்பில் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் இணைந்து பிரமாண்டமான பட்ஜெட்டில் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார்கள்.‌

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ‘சூர்யாவின் சனிக்கிழமை’ எனும் திரைப்படம் இன்று பூஜையுடன் பிரமாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் தயாரிப்பாளர் டி வி வி தனய்யா படத்தின் திரைக்கதையை இயக்குநரிடம் ஒப்படைத்தார்.‌ முதல் ஷாட்டிற்கு தில் ராஜு கேமராவை சுவிட்ச் ஆன் செய்து தொடங்கி வைக்க, இயக்குநர் வி. வி. விநாயக் கிளாப் போர்டு அடிக்க, எஸ். ஜே. சூர்யா இயக்கினார்.

ஒரு பிரத்யேக ஜானரிலான கதைகளில் மட்டும் நடிப்பதில் நானி தன்னைப் பொருத்திக் கொள்ளவில்லை. கதை மற்றும் அவரது கதாபாத்திரத்தின் தேவைக்கேற்ப அவரும் தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார். ‘சூர்யாவின் சனிக்கிழமை’ படத்தில் நானி முரட்டுத்தனமான தோற்றத்தில் நடிக்கிறார்.

‘நேச்சுரல் ஸ்டார்’ நானியுடன், பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். எஸ். ஜே. சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த பான் இந்திய திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

ஜி. முரளி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, கார்த்திகா ஸ்ரீனிவாஸ் பட தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this