‘சட்டி கறி உணவகம்’ என்பது ஈரோடு பகுதியில் ஸ்பெஷல் நாட்டுக்கோழி உணவு வகைகளுக்கான பிரபலமான உணவகம். அந்த உணவகம் இப்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அமைந்துள்ள அக்கரை எனும் இடத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த உணவகத்தை நடிகர் ரவி மோகன், தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
உணவகத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து உரிமையாளரும் உணவு ஆர்வலருமான அஷ்வின் மற்றும் காயத்ரி ஆகியோர் பேசியபோது, ”உணவே மருந்து; ஆரோக்கியத்தின் ஆணிவேர் உணவு. எங்களுடைய சட்டி கறி உணவகத்திற்கு வருகை தரும் விருந்தினர்களையும், வாடிக்கையாளர்களையும், அவர்களின் வீட்டை போல் உணர வைப்பதும், அவர்களுக்கு ஒப்பற்ற சுவையுடன் கூடிய உணவை வழங்குவதும் தான் எங்களுடைய முதன்மையான இலக்கு.
எங்களுடைய உணவகத்தில் தென்னிந்திய பாணியில் நாட்டுக்கோழி மற்றும் கடல் சார்ந்த உணவுகளை தயாரித்து வழங்குகிறோம். எங்களுடைய உணவகத்தின் தோற்றமே ஓலை குடிசையை கொண்டு அலங்கரிக்கப்பட்டு, பாரம்பரிய பின்னணியை கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது.
வருகை தரும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் அவர்களுக்கு எங்களின் உணவு பட்டியலில் இடம் பிடித்த அவர்களின் விருப்பத்திற்குரிய உணவை கடந்த தசாப்தங்களில் தமிழர்களின் மரபு சார்ந்த சமையல் முறையின் படி தயார் செய்து அவர்களுக்கு பரிமாறுகிறோம். உணவை சுவைத்து மகிழ இனிமையான சூழலையும் உருவாக்கி இருக்கிறோம். இந்த உணவகத்தில் 90 இருக்கைகள் கொண்ட பண்ணை உணவகமும் இடம் பிடித்திருக்கிறது. இதில் உங்களுடைய வீட்டிற்கு வருகை தரும் விருந்தினர்களை போல் உணர வைப்பதிலும், அவர்களுக்கு மறக்க முடியாத… என்றென்றும் நினைவில் இருக்கக் கூடிய அனுபவத்தை அளிப்பதிலும் நாங்கள் அர்ப்பணிப்புடன் சேவை செய்ய தயாராக இருக்கிறோம்.
சட்டி கறி உணவகம் கிராமிய பாணியிலான சுவைக்காக பல விசயங்களை உறுதியான விதிமுறைகளுடன் பின்பற்றுகிறது.
*ஆரோக்கியத்திற்காக செக்கு எண்ணெயை மட்டுமே பயன்படுத்துகிறோம்.
*ஈரோடு பாணியில் பராமரிக்கப்படும் நாட்டு கோழியை மட்டுமே பயன்படுத்துகிறோம்.
*உணவின் சுவைக்காக பயன்படுத்தும் மசாலாக்கள் எங்களுடைய கைகளாலே வீட்டிலேயே தயாரிக்கப்படுகிறது.
*உணவு தயாரிக்கும் போது நறுமணத்தை மேம்படுத்துவதற்காக பாரம்பரியமான விறகு அடுப்பினை பயன்படுத்துகிறோம்
*சமையலுக்கு வெங்காய தாள்களையும் சின்ன வெங்காயத்தையும் மட்டுமே பயன்படுத்துகிறோம்.
ஒருமுறை வருகை தாருங்கள்..! எங்களின் விருந்தோம்பலை ஏற்றுக் கொள்ளுங்கள்..! நீங்களும், உங்களது நண்பர்களும் எங்களுடைய வாடிக்கையாளர்களாக மாறிவிடுவீர்கள்” என்றார்.
இந்த உணவகத்தின் பிரத்யேக உணவு வகைகள்:-
நாட்டுக்கோழி வறுவல், பச்சை மிளகாய் வறுவல், மிளகு வறுவல், நல்லாம்பட்டி வறுவல், கேரளா இறால் தொக்கு, வஞ்சிரம் வறுவல், மீன் குழம்பு, மட்டன் குழம்பு
உள்ளிட்ட அசைவ உணவுகள்…
பச்சைப்புளி ரசம், சம்மந்தி மற்றும் பருப்புப்பொடி, பிரட் ஹல்வா, பரோட்டா,
காரப்பூண்டு தோசை, வேர்க்கடலை குழம்பு, கறி தோசை உள்ளிட்ட சைவ உணவுகள்…