HomeCinemaகுடும்பஸ்தன் 'வெண்ணிலா' பாத்திரத்துக்கு கிடைத்த வரவேற்பு; நடிகை சான்வே மேக்னாவுக்கு குவியும் வாய்ப்புகள்!

குடும்பஸ்தன் ‘வெண்ணிலா’ பாத்திரத்துக்கு கிடைத்த வரவேற்பு; நடிகை சான்வே மேக்னாவுக்கு குவியும் வாய்ப்புகள்!

Published on

சமீபத்தில் வெளியான ‘குடும்பஸ்தன்’ படத்திற்கு கிடைத்த பெரியளவிலான வெற்றியில் கதாநாயகனின் மனைவியாக நடித்த சான்வே மேகன்னாவுக்கும் மிகப்பெரிய பங்குண்டு. வெண்ணிலா என்ற கதாபாத்திரத்திற்கு அவரது இயல்பான மற்றும் ஆழமான நடிப்பு, ரசிகர்களுக்கு அந்தக் கதாபாத்திரத்தை மறக்க முடியாததாக மாற்றியுள்ளது.இந்த வெற்றியைத் தொடர்ந்து, அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு அவருக்கு எதிர்பாராத விதமாகதான் வந்தது. ஹைதராபாத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது அவரிடம் ஏதோ ஒன்று சிறப்பாக இருப்பதை கணித்த நடிகை ஜெயசுதா சான்வேக்கு முதல் பெரிய வாய்ப்பை கொடுத்தார். அந்த தருணம்தான் சான்வேக்கு நடிப்பின் மீது ஆர்வத்தைத் தூண்டியது. கடந்த ஏழு ஆண்டுகளில் ’பிட்ட காதலு’ (நெட்ஃபிலிக்ஸ்), ’புஷ்பக விமானம்’ மற்றும் ’பிரேம விமானம்’ ஆகிய படங்களின் மூலம் அவர் தனது கரியரில் முன்னேறியுள்ளார். ’குடும்பஸ்தன்’ அவரை இன்னும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்று, கதாநாயகியாக அவருக்கு பெரும் வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறது. அடுத்தடுத்து ஆக்‌ஷன் ஸ்பை த்ரில்லர், தீவிரமான ஸ்போர்ட்ஸ் கதை, ரொமாண்டிக் காமெடி போன்ற வித்தியாசமான கதைத்தேர்விலும் கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆசைப்படுகிறார். இதுபோன்ற கதைகளில் முழுமையான நடிப்புத் திறனை வெளிப்படுத்த முடியும் என்கிறார்.

அவரிடம் பேசியபோது, “’குடும்பஸ்தன்’ படத்திற்கு ரசிகர்கள் கொடுத்து வரும் பாராட்டு மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தைப் பலரும் தங்களுடன் பொருத்திக் கொண்டார்கள்.

நடிகை ஸ்ரீதேவிதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவரைப் போலவே இயல்பான நடிப்பை திரையில் கொண்டு வர வேண்டும்” என்றார்.

தனது திறமை மீது நம்பிக்கைக் கொண்டு அர்ப்பணிப்போடு செயல்படும் சான்வே சினிமாவில் தனக்கான தனித்துவமான இடத்தைப் பிடிப்பார் என்று உறுதியாக நம்பலாம்.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this