HomeMovie Reviewசூது கவ்வும் சினிமா விமர்சனம்

சூது கவ்வும் சினிமா விமர்சனம்

Published on

ஆட்களைக் கடத்தி பணம் பறிக்கும் இளைஞனை சுற்றிச் சுழன்ற ‘சூது கவ்வும்’ கதையம்சத்தாலும் டார்க் ஹியூமர் ரக காமெடியாலும் தமிழ் சினிமாவில் வரலாற்று வெற்றியை தட்டிப் பறித்தது. அதன் தொடர்ச்சியாக எட்டிப் பார்த்திருக்கிறது ‘சூது கவ்வும் 2.’

முதல் பாக ஹீரோ தாஸின் (விஜய் சேதுபதி) கொள்கைகளைப் பின்பற்றி இந்த பாகத்தில் யார் யாரையே கடத்தில் கல்லா கட்டிக் கொண்டிருக்கும் வாசு (மிர்ச்சி சிவா) ஊழலில் சிறந்த ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவரை கடத்துகிறார். அதனால் ஆட்சியே பறிபோகும் நிலைமை. கடத்தியவனை அமைச்சர் சும்மா விடுவாரா?

இப்படி நகரும் கதையில் அமைச்சர் வாசுவை என்ன செய்கிறார், வாசு அவரை என்ன செய்கிறார் என்பதே திரைக்கதை…  இயக்கம் எஸ்.ஜே.அர்ஜுன்

மிர்ச்சி சிவாவுக்கு ‘தமிழ் படம்’ ஸ்டைலில்தான் நடிக்க வருகிறது. அந்த நடிப்பு ரசிக்க வைக்கும்தான். ஆனால், அதற்கேற்ற காட்சிகள் இல்லாமல் தடுமாறியிருக்கும் சிவா, போதையிறங்கினால் கடத்தல் தொழில் சொதப்பலாகி விடும் என்பதற்காக அளவு பார்த்து குடித்துக் கொண்டிருப்பது, போதை குறையும்போது தன் கண்ணுக்கு மட்டுமே தென்படுகிற பாம்பிடமிருந்து தப்பிக்க மல்லுக்கட்டுவது, தன் கண்ணுக்கு மட்டுமே  தென்படுகிற காதலியுடன் ரொமான்ஸில் ஈடுபடுவது என என்னவெல்லாமோ செய்கிறார். சில இடங்களில் மட்டுமே ரசிக்க முடிகிறது.

படத்தின் இரண்டாம் ஹீரோவாக, நேர்மையற்ற அரசியல்வாதியாக நிதியமைச்சராக கருணாகரன். ஊழல் பணத்தில் சொகுசு வாழ்க்கையில் உற்சாகம் காண்பதாகட்டும் முறைகேடான வழியில் தேர்தலில் ஜெயிக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் துணையுடன் ஸ்கெட்ச் போடுவதாகட்டும், சிவாவிடம் சிக்கி சின்னாபின்னமாவதாகட்டும் அலட்டலும் அமைதியுமான உடல்மொழியால் ரசிக்க வைக்கிறார். அந்த கிளைமாக்ஸ் காட்சியின் டயலாக் டெலிவரியும் கவர்கிறது.

ஹரிஷா சூது கவ்வும் முதல் பாக நாயகி சஞ்சிதாவின் சாயலில் அழகாக இருக்கிறார், ஹீரோவின் கண்ணுக்கு மட்டுமே தெரிகிற பெண்ணாக அப்படியும் இப்படியாக வந்து போவதோடு அவருக்கான கடமை முடிகிறது.

நேர்மையான அரசியல்வாதியாக வாகை சந்திரசேகர் சற்றே கவனம் ஈர்க்க, அவரின் விசுவாசியாக எம் எஸ் பாஸ்கர், சிவாவின் கடத்தல் கூட்டாளிகளாக வருகிற கல்கி ராஜா, ‘நக்கலைட்ஸ்’ கவி, போலீஸ் அதிகாரியாக யோக் ஜேபி என மற்றவர்களின் பங்களிப்பில் குறையுமில்லை; குறிப்பிட்டுப் பாராட்ட தனித்துவமாய் எதுவுமில்லை.

கதைக்களத்தை எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்த பாடல்களும், ஹரி எஸ்.ஆரின் பின்னணி இசையும் கொஞ்சமே கொஞ்சம் மெருகேற்றியிருக்கின்றன.

முதல் பாகத்தை மனதில் வைத்து படம் முழுக்க விழுந்து விழுந்து சிரிக்கலாம் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமடைய வேண்டியிருக்கும். சுமாரான காமெடிக்கும் வயிறு குலுங்க சிரிப்பவர்களுக்கு அப்படியான சிக்கல் ஏதும் கிடையாது!

Rating 2.5 / 5

Latest articles

இரு மாநில எல்லையில் நடக்கும் விறுவிறுப்பான காதல் கதையில் உருவான ஆலி’ தமிழ், மலையாள மொழிகளில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது!

முற்றிலும் புதிய முகங்களின் பங்களிப்போடு உருவான 'ஆலி'  திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வரும் ஆகஸ்ட் 14-ம்...

மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ படத்தின் டீசர் வெளியானது!

https://www.youtube.com/watch?v=EFI-xLTY9yU   டி ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி...

நியூஸ் 7 தமிழ் விருது வழங்கும் விழா – ஜி கே எம் தமிழ்குமரன் விருதுகள் வழங்கி வாழ்த்துரை!

‘நியூஸ் 7 தமிழ்’ தொலைக்காட்சி நடத்திய Business excellence award 2026  விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னை ஹயாத்...

ஒவ்வொரு காட்சியும், பாடலும், கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது! -நிறம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் முகேன் பேச்சு

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் 'நிறம்.'...

More like this