HomeCinemaமெகாஸ்டார் சிரஞ்சீவி, இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணியின் கவனம் ஈர்க்கும் புதிய பட அறிவிப்பு!

மெகாஸ்டார் சிரஞ்சீவி, இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணியின் கவனம் ஈர்க்கும் புதிய பட அறிவிப்பு!

Published on

மெகா ஸ்டார் சிரஞ்சீவி, சிறந்த திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பதில் வல்லவர்.  அவரது கெரியரில் தொடர்ச்சியாக அறிமுகத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கி வந்துள்ளார்.  நம்பிக்கைக்குரிய வளரும்  இயக்குநர்களைக் கண்டறிந்து அவர்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் திறன், அவரது தனிச்சிறப்புகளில் ஒன்றாகும். சிரஞ்சீவியின் அடுத்த படம், அவரது தீவிர ரசிகரான ஸ்ரீகாந்த் ஒடேலா என்ற மிகவும் திறமையான இயக்குநருக்கு ஒரு அற்புதமான புதிய அத்தியாயத்தை வழங்கியுள்ளது.

இயக்குநரின் முதல் படமான ‘தசரா’ மாபெரும் வெற்றி பெற்றது, வணிகரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், பரவலான பாராட்டையும் பெற்றது. பல மதிப்புமிக்க விருதுகளையும் இயக்குநர் வென்றார். சிரஞ்சீவி உடனான அவரது இந்தத் திரைப்படம், பெரும் எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியுள்ளது.

நேச்சுரல் ஸ்டார் நானியின் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் வழங்கும் இப்படத்தை, SLV சினிமாஸ் சார்பில், சுதாகர் செருக்குரி பிரமாண்டமாக தயாரிக்கிறார்.

இன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ போஸ்டர், படத்தின் களத்தையும், சிரஞ்சீவியின் கதாபாத்திரத்தின் தீவிர தன்மையையும், வெளிப்படுத்துகிறது. போஸ்டரில் இடம்பெற்றுள்ள சிவப்பு நிறத்திலான தீம், கதையின் மைய வன்முறையைக் குறிக்கிறது, அதே நேரத்தில் “வன்முறையில் அவர் அமைதியைக் காண்கிறார்” என்ற மேற்கோள், சிரஞ்சீவியின் கடுமையான மற்றும் அழுத்தமான பாத்திரத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது. இந்த திரைப்படம் அதிரடி-ஆக்சன், திரில்லர் சினிமா அனுபவமாக இருக்கும். சிரஞ்சீவி திரை வாழ்க்கையில் மிக புதுமையான அழுத்தமான படமாக இருக்கும்.

நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கி வரும், அவரது இரண்டாவது படைப்பான ‘தி பாரடைஸ்’ படம் முடிந்த பிறகு, இப்படம் தொடங்கவுள்ளது.

படக் குழு:
எழுத்து, இயக்கம்: ஸ்ரீகாந்த் ஒடேலா
தயாரிப்பாளர்: SLV சினிமாஸ் சுதாகர் வழங்குபவர்: நானியின் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ்
மக்கள் தொடர்பு : சதீஷ்குமார் S2 மீடியா

Latest articles

ஒவ்வொரு காட்சியும், பாடலும், கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது! -நிறம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் முகேன் பேச்சு

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் 'நிறம்.'...

காவல்துறையிலிருக்கும் மனிதனை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை ஆராய்வதே சுவாரஸ்யமாக இருந்தது! -வதந்தி 2′ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைக் குவித்து வரும் நிலையில் நாயகன் சசிகுமார் பேச்சு

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8 இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின்...

இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ஆரோக்கியம், மனிதநேயம், சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி! -தான் இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் டாக்டர்...

சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ...

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

More like this