HomeCinemaரியோ ராஜ் காதல் நாயகனாக நடிக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிலம்பரசன்...

ரியோ ராஜ் காதல் நாயகனாக நடிக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிலம்பரசன் டி. ஆர் – யுவன் சங்கர் ராஜா!

Published on

நடிகர் ரியோ ராஜ் காதல் நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிலம்பரசன் டி. ஆர்., யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

ஃபர்ஸ்ட் லுக்கில் திரையில் லவ் மேஜிக் நிகழ்த்தும் இளம் காதலர்களான ரியோ ராஜ், கோபிகா ரமேஷ் ஆகியோரின் இளமைத் துள்ளலான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

இந்த படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘மாடர்ன் மாஸ்ட்ரோ’ யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவாகும் 183வது இசை ஆல்பம் ‘ஸ்வீட் ஹார்ட்’ என்பதால் இப்படத்தின் பாடலுக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது!

படக்குழு:- பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சிவசங்கர் கவனித்திருக்கிறார். காமெடி வித் ரொமான்டிக் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார்.

Latest articles

தனுஷின் மருமகன் பவிஷ்- குஷ்புவின் மகள் அவந்திகா இணையும் ‘அட்டாக்கர்.’

https://www.youtube.com/watch?v=xyr4YqANj5E பவிஷ் மற்றும் அவந்திகா சுந்தர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் “அட்டாக்கர்” திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை Zinema...

இரட்டையர் சினிமா விமர்சனம்

எந்த அம்மாவாவது தன் பிள்ளைகளில் ஒருவருக்கு சாப்பாடு போட்டு, இன்னொரு குழந்தைக்கு சாப்பாடு போடாமல் விடுவாரா? எந்த அம்மாவாவது...

விருமாண்டி’யில் பயன்படுத்தப்பட்ட திரைக்கதை டெக்னிக்கை இதில் பயன்படுத்தியுள்ளோம்! -‘மூன்றாம் கண்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் சகோ கணேசன் பேச்சு

விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் நடிப்பில், ஹைபர்லிங்க் ஆந்தாலஜி வடிவில் க்ரைம் திரில்லராக அறிமுக இயக்குநர் சகோ...

எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியின் ‘ஸ்லம் டாக்’ படத்தின் டீசர் ஜூன் 8-ம் தேதி வெளியாகிறது!

மாஸ் ஆக்ஷன் படங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில்...

More like this