HomeCinemaசூர்யா நடிக்கும் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

சூர்யா நடிக்கும் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Published on

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ‘சூர்யா 44’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டுள்ளது படக்குழு.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான் ,ஊட்டி, கேரளா, சென்னை ஆகிய இடங்களில் நான்கு கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கி இருக்கிறது. விரைவில் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக், டைட்டிலுக்கான மோசன் போஸ்டர்… என படத்தைப் பற்றிய புதிய தகவல்களை படக்குழுவினர் தொடர்ந்து வெளியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே படத்தின் நாயகனான நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்திற்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டது என்பதும், அதில் நடிகர் சூர்யாவின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால்.. அந்த காணொளி நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.‌

படக்குழு:-

ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஷபிக் முஹம்மத் அலி மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா – சூர்யா ஆகியோருடன் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகியிருக்கிறார்கள்.

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this