Sunday, July 20, 2025
spot_img
HomeCinemaசந்தானம் நடிப்பில், கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் விரைவில்!

சந்தானம் நடிப்பில், கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் விரைவில்!

Published on

சந்தானம் நடிக்கும் புதிய படத்தை ‘கோபுரம் பிலிம்ஸ்’ அன்புச்செழியன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். இந்த படம் மூலம் பிரியாலயா என்பவர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலாவும் கூடவே முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படத்தை ஆனந்த் நாராயண் இயக்கியுள்ளார்.

பல வெற்றிப் படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எழிச்சூர் அரவிந்தன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். டி. இமானின் இசையில் மூன்று பாடல்கள் மிக சிறப்பாக வந்துள்ளன. பாடல் வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர்.

சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக், டிரெய்லர் வெளியீடு எப்போது என்பது தெரியவரும்.

‘படம் கதையம்சத்தோடு நகைச்சுவை கலந்த கமர்ஷியல் பிரமாண்ட படைப்பாக, அனைத்து இளைஞர்களும் ரசிக்கும்படி, சந்தானத்தின் ரசிகர்கள் கொண்டாடும்படி உருவாகியுள்ளது’ என்கிறது படக்குழு.

‘கோபுரம் பிலிம்ஸ்’ ‘வெள்ளைக்கார துரை’, ‘தங்கமகன்’ ‘மருது’, ‘ஆண்டவன் கட்டளை’, உள்ளிட்ட வெற்றிப் படங்களை தொடர்ந்து இந்த படத்தை தயாரிக்கிறது.

படக்குழு:-
ஒளிப்பதிவு – ஓம் நாராயண்
எடிட்டிங் – எம். தியாகராஜன்
கலை – எம். சக்தி வெங்கட்ராஜ்
ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல்
நடனம் – பிருந்தா, பாபா பாஸ்கர்

Latest articles

இந்தப் படம் அனைவரையும் மெஸ்மரைஸ் செய்யும்; தொடக்கம் முதல் இறுதி வரை கண் இமைக்காமல் பார்க்கும்படி இருக்கும்! –‘அக்யூஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் 

உதயா - அஜ்மல் - யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'அக்யூஸ்ட்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில்...

இந்த படம் திரில்லராக மட்டுமல்லாது சென்டிமெண்ட், காமெடி என ஜனரஞ்சகமாக  இருக்கும்! -‘பிளாக்மெயில்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மு மாறன் 

ஜி.வி. பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில், மு மாறன் இயக்கியிருக்கும் ’பிளாக்மெயில்’ திரைப்படம் ஆகஸ்ட்...

ஆக்கிரமிப்பு சினிமா விமர்சனம்

சாமானிய மனிதன் ஒருவன் ஊரையே நடுங்க வைக்கும் ரவுடியை பழி தீர்க்கும் கதை. ஒரு வரியாக சொல்லும்போது இதெல்லாம் ஆயிரம்...

விஷால் நடிக்கும் 35-வது படம் பூஜையுடன் துவக்கம்! சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகிறது.

விஷால் நடிப்பில் மதகஜராஜா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் மாபெறும் வரவேற்பு பெற்று மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அந்த...

More like this

இந்தப் படம் அனைவரையும் மெஸ்மரைஸ் செய்யும்; தொடக்கம் முதல் இறுதி வரை கண் இமைக்காமல் பார்க்கும்படி இருக்கும்! –‘அக்யூஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் 

உதயா - அஜ்மல் - யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'அக்யூஸ்ட்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில்...

இந்த படம் திரில்லராக மட்டுமல்லாது சென்டிமெண்ட், காமெடி என ஜனரஞ்சகமாக  இருக்கும்! -‘பிளாக்மெயில்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மு மாறன் 

ஜி.வி. பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில், மு மாறன் இயக்கியிருக்கும் ’பிளாக்மெயில்’ திரைப்படம் ஆகஸ்ட்...

ஆக்கிரமிப்பு சினிமா விமர்சனம்

சாமானிய மனிதன் ஒருவன் ஊரையே நடுங்க வைக்கும் ரவுடியை பழி தீர்க்கும் கதை. ஒரு வரியாக சொல்லும்போது இதெல்லாம் ஆயிரம்...
error: Content is protected !!