HomeGeneralபொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்த ‘நாங்க இருக்கோம்’ குறும்படம் வெளியீடு!

பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்த ‘நாங்க இருக்கோம்’ குறும்படம் வெளியீடு!

Published on

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ‘நாங்க இருக்கோம்’ என்கிற குறும்படம் தற்போது வெளியாகியுள்ளது. லைட்ஸ் ஆன் மீடியா சார்பில் அதன் பங்குதாரர்களில் ஒருவரான வெங்கி சந்திரசேகர் இதன் கதையை எழுதி இயக்கியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் போஸ்ட் புரொடக்சன் பணிகளை மேற்கொள்ளும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான லைட்ஸ் ஆன் மீடியா நிறுவனம் ஏற்கனவே ‘பருந்தாகுது ஊர்க்குருவி’ என்கிற படத்தை தயாரித்துள்ளது. அது மட்டுமல்ல ‘திரவுபதி 2’. ‘அடியே’. ‘பீனிக்ஸ்’, ‘நந்தன்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களின் போஸ்ட் புரொடக்சன் பணிகளில் இந்த நிறுவனம் தனது பங்களிப்பை கொடுத்துள்ளது.
தேர்தல் நேரத்தில் மக்களுக்கு வாக்களிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இதை உருவாக்கியுள்ளதாக கூறும் இயக்குநர் வெங்கி சந்திரசேகர், “ இதுபோன்று தொடர்ந்து பல சமூக விழிப்புணர்வு குறும்படங்களை எங்கள் நிறுவனம் உருவாக்கி வருகிறது” என்றும் கூறுகிறார்.
‘முதலும் நீ முடிவும் நீ’ படத்தில் நகைச்சுவையில் கவனம் ஈர்த்த கௌதம் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜெய் இதன் ஒளிப்பதிவையும் அரவிந்தன் படத்தொகுப்பையும் கவனிக்க, அவினாஷ் இசையமைத்துள்ளார்.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this