HomeCinemaவெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்க வேண்டும்! -விருப்பம் தெரிவிக்கிறார்...

வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்க வேண்டும்! -விருப்பம் தெரிவிக்கிறார் பராரி பட நாயகி சங்கீதா கல்யாண்குமார்  

Published on

நடிகைகளில் சிலர் மட்டுமே ‘பக்கத்து வீட்டுப் பெண்’ என்ற உணர்வை பார்வையாளர்களுக்கு தருவார்கள். அவர்களில் சங்கீதா கல்யாண் குமாரும் ஒருவர்.

சந்தானம் நடிப்பில் வெளியான ‘80ஸ் பில்டப்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் ராஜு முருகனின் தயாரிப்பில் எழில் பெரியவாடி இயக்கிய ‘பராரி’ படத்தில் தனது இயல்பான தோற்றத்தால் ரசிகர்களின் ஆர்வத்தை கவர்ந்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளிவர உள்ளது. டிரெய்லரில் அவரது நடிப்பு கவனம் ஈர்த்துள்ளது.

பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷனை பட்டப்படிப்பாக முடித்த இவர் திரைப்படங்கள் மற்றும் ஊடகங்கள் பற்றிய விசாலமான பார்வையைப் பெற்றிருக்கிறார். சென்னையை சேர்ந்த இவர் சினிமா மற்றும் நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார்.

அவரிடம் பேசியபோது, ”ஒரு நடிகை ’ஹீரோயினா’க மட்டுமே படத்தில் வர வேண்டும் என்ற அவசியமில்லை. கதைக்கு தேவைப்படும் வலுவான கதாபாத்திரங்களிலும் நடிக்கலாம். வெற்றிமாறன், செல்வராகவன், சுதா கொங்கரா, லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் பல நடிகைகளுக்கு இதுபோன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரங்களை கொடுத்துள்ளனர். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது எனது கனவு.

’கார்கி’, ’மகாநடி’ (நடிகையர் திலகம்), ’அருந்ததி’, ’சீதா ராமம்’ போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த படங்கள் ஒருபோதும் பழையதாகாது. வருடங்கள் செல்லச் செல்ல அதன் மதிப்பு இன்னும் அதிகமாகும். அந்தப் படங்களில் நடிகைகள் சாய் பல்லவி, கீர்த்தி சுரேஷ், அனுஷ்கா ஷெட்டி மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோர் தங்கள் நடிப்பின் மூலம் அந்தப் படங்களில் மாயாஜாலம் நிகழ்த்தி இருக்கின்றனர். எந்த நடிகைக்கும் இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். எனக்கும் இருக்கிறது” என்றார்.

Latest articles

தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள்… ஜூரியாக செயல்பட்ட டான்ஸ் மாஸ்டர் கலா & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

தனுஷ் இயக்கிய படத்துக்கும் தனுஷ் நடித்த படத்துக்கும் தேசிய விருது… தேர்வுக் குழுவில் இடம் பெற்ற நடன இயக்குநர் கலா மாஸ்டர் & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

மங்கேஷ் தகாடேவின் இசை, ரிச்சா ஷர்மாவின் ஆன்மாவைத் தொடும் குரல், ஷகீல் அசாமியின் அர்த்தமுள்ள வரிகள்… ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்திலிருந்து வெளியானது ‘நீ செல்’ பாடல்!

https://www.youtube.com/watch?v=8JofRnEai6s ZEE  Studios  வழங்க, MIG Production இணைந்து தயாரித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ...

ஜூலை 17; 2026 முதல் குழந்தைகளுக்கான Shivlok Ke Kundakka Mandakka புதிய புராண அனிமேஷன் தொடரை ஒளிபரப்பும் ZEE 5… 

https://www.youtube.com/watch?v=0KSXQAy2GgY குழந்தைகளுக்கான பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் குற்றவுணர்வில்லாத (Guilt-Free) திரை நேர அனுபவத்தை வழங்கும் பிரபல தளமான KidZ on...

More like this