HomeCinemaஆத்வி சேஷின் 'டகோயிட்' பான் இந்திய அதிரடி படத்தின் படப்பிடிப்பில் இணைந்த ஸ்ருதி ஹாசன்!

ஆத்வி சேஷின் ‘டகோயிட்’ பான் இந்திய அதிரடி படத்தின் படப்பிடிப்பில் இணைந்த ஸ்ருதி ஹாசன்!

Published on

ஆத்வி சேஷின் மெகா பான்-இந்திய ஆக்‌ஷன் திரைப்படமான ‘டகோயிட்’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கி நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன் பங்கேற்றுள்ளார். இந்த ஷெட்யூலில் படத்தின் முக்கியமான காட்சிகள் மற்றும் பிரமாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். நடிகை ஸ்ருதி ஹாசன் நடிகர் ஆத்வி சேஷுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட செல்ஃபியைப் பகிர்ந்து, இனிமையான ஷீட்டிங் அனுபவம் எனக்குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு முன்னாள் காதலர்கள், தங்கள் வாழ்க்கையை மாற்ற வேண்டி, தொடர்ச்சியான கொள்ளைகளை ஒன்றாக இணைந்து செய்கிறார்கள். இதனை பரபரப்பான திருப்பங்களுடன் சொல்லும் திரைப்படம் தான் ‘டகோயிட்’. ஆத்வி சேஷின் ‘க்ஷணம்’ மற்றும் ‘கூடாச்சாரி’ உள்ளிட்ட பல தெலுங்கு பிளாக்பஸ்டர் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய, ஷனைல் தியோ இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஆத்வி சேஷு மற்றும் ஸ்ருதி ஹாசன் முதல் முறையாக இப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர். இந்த திரைப்படத்தை சுப்ரியா யர்லகட்டா தயாரிக்க, சுனில் நரங் இணை தயாரிப்பு செய்துள்ளார் மற்றும் அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் இப்படத்தினை வழங்குகிறது. இப்படம் இந்தி மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை ஆத்வி சேஷ் மற்றும் ஷனைல் தியோ ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். 2022-ம் ஆண்டு பெரும் பாராட்டுக்களைக் குவித்த ‘மேஜர்’ திரைப்படத்திற்கு பிறகு உருவாகும், ஆத்வி சேஷின் இரண்டாவது இந்திப் படம் இது.

படக் குழு:
இயக்கம்: ஷனைல் டியோ
கதை, திரைக்கதை: ஆத்வி சேஷ் மற்றும் ஷனைல் தியோ
தயாரிப்பாளர்: சுப்ரியா யர்லகட்டா
இணை தயாரிப்பாளர்: சுனில் நரங்
வழங்குபவர்கள்: அன்னபூர்ணா ஸ்டுடியோஸ்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this