HomeCinemaநகைச்சுவையும் குடும்ப உணர்வுகளும் இணைந்த படைப்பாக யோகி பாபு நடிக்கும் ‘சன்னிதானம் பி.ஓ.' படத்தின் ஷூட்டிங்...

நகைச்சுவையும் குடும்ப உணர்வுகளும் இணைந்த படைப்பாக யோகி பாபு நடிக்கும் ‘சன்னிதானம் பி.ஓ.’ படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடக்கம்!

Published on

யோகி பாபு, பிரமோத் ஷெட்டி நடிப்பில் குடும்ப உணர்வுகளும் நகைச்சுவையும் சரிவிகிதத்தில் கலந்த படைப்பு ‘சன்னிதானம் பி.ஓ.’

இந்த படம் அறிமுக இயக்குநர் அமுதாசாரதி இயக்கத்தில், சபரிமலை பின்னணியில் தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் ஒரே சமயத்தில் உருவாகிறது. வர்ஷா விஸ்வநாத், மேனகா சுரேஷ், மூணார் ரமேஷ், வினோத் சாகர் மற்றும் அஸ்வின் ஹாசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படம் குறித்து பேசிய இயக்குநர் அமுதாசாரதி, ‘‘சிறுவயதில் தொலைந்த தனது மகனை தேடும் ஒரு தாயின் கதையை குடும்ப உணர்வுகளும் நகைச்சுவையும் சரிவிகிதத்தில் கலந்து ‘சன்னிதானம் பி.ஓ’ சொல்லும். தாயாக சித்தாராவும், மகனாக யோகி பாபுவும் நடிக்கின்றனர். மற்றொரு முதன்மை கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் பிரமோத் ஷெட்டி நடிக்கிறார்.

சபரிமலை பின்னணியில் நடக்கும் இக்கதையின் படப்பிடிப்பு சென்னையில் விரைவில் தொடங்க உள்ளது. பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும். உணர்வுப்பூர்வமான ஒரு கதையை நகைச்சுவை ததும்ப பார்வையாளர்களுக்கு இத்திரைப்படம் வழங்கும்” என்றார்.

படத்தை ‘சர்வதா சினி காரேஜ்’, ‘ஷிமோகா கிரியேஷன்ஸ்’ சார்பில் மது ராவ், ஷபீர் பதான் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

படக்குழு:-
கதை, திரைக்கதை – அஜினு ஐயப்பன் வசனம் – அமுதாசாரதி
ஒளிப்பதிவு – வினோத் பாரதி.ஏ. படத்தொகுப்பு – பொன் கதிரேஷ் உடைகள் – நடராஜ்
ஒப்பனை – ஷிபுகுமார்
கலை – விஜய் தென்னரசு
சண்டைப் பயிற்சி – மிரட்டல் சிவா
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

Latest articles

‘டோரதி’ திரைப்படத்தில் வில்லன் அவதாரத்தில் மிரள வைத்த நடிகர் சௌந்தரராஜா!

'சுந்தரபாண்டியன்', 'ஜிகர்தண்டா', கடைக்குட்டி சிங்கம், பிகில் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து, கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக...

சாராயம், போதை வஸ்துகள், காவல் துறை நுழையாத ஊர்… ஊரைக் கெடுத்து காதலர்களைப் பிரிக்கத் துடிக்கும் வில்லன்… பரபரப்பான உருவான ‘மானிடன்’ விரைவில் திரைக்கு வரவுள்ளது!

விரைவில் திரைக்கு வரவிருக்கிறது 'ஜேம்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ்' ஜார்ஜ் வில்லியம்ஸ் தயாரிப்பில், பல படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய...

ஆல்பாஸ் சினிமா விமர்சனம்

திண்ணையில கிடந்தவனுக்கு திடுக்னு வந்துச்சாம் யோகம் என்பது போல் மூன்று எளிய குடும்பங்களிடம் 5 கோடி ரூபாய் சிக்குகிறது....

தாய் நிலம் சினிமா விமர்சனம்

இலங்கைத் தமிழர்கள் குறித்த படைப்புகளின் வரிசையில் குண்டு வெடிப்பு, பாலியல் கொடுமைகள் என பழக்கப்பட்ட விஷயங்களைத் தவிர்த்து உருவாகியிருக்கும்...

More like this