HomeCinemaசிலம்பரசன் டி.ஆர். வெளியிட்ட ‘ரெபல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் ரசிகர்களைக் கவர்ந்த ஜீ. வி. பிரகாஷ்!

சிலம்பரசன் டி.ஆர். வெளியிட்ட ‘ரெபல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் ரசிகர்களைக் கவர்ந்த ஜீ. வி. பிரகாஷ்!

Published on

இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படம் ‘ரெபல்.’

அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கியிருக்கும் இந்த படத்தில் மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜீ. வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

உண்மை சம்பவங்களை தழுவிய அதிரடி ஆக்சன் என்டர்டெய்னரான இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் வெகு விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிலம்பரசன் டி ஆர் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்தியிருக்கிறார்.

ஃபர்ஸ்ட் லுக்கில் கதையின் நாயகனான ஜீ.வி. பிரகாஷ் குமாரின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது” 1980களில் நடைபெற்ற சில உண்மை சம்பவங்களை தழுவி திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. கதை, கல்லூரியை களமாக கொண்டிருக்கிறது. கல்லூரி மாணவர்களுக்கான அரசியலும் பேசப்பட்டிருக்கிறது. ஜீ.வி. பிரகாஷ் குமாரின் திரையுலக பயணத்தில் இந்த படம் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தும்” என்றார்.

படக்குழு:-
திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.

படத்தொகுப்பு பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாள, கலை இயக்கத்தை உதயா கவனிக்கிறார். ஆக்சனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அதிரடி சண்டை காட்சிகளை சக்தி சரவணன் அமைத்திருக்கிறார்.

Latest articles

இளைய திலகம் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கும் அழகிய லைலா படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது! 

ஏ.ஆர்.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோ சார்பில் ஏ.ஆர்.மதியழகன், ஆரத்தி இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் 'அழகிய லைலா.' இளைய திலகம்...

’ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இந்தியா முழுவதும் 3 லட்சம் மாணவிகளிடம் HPV விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்!

சினிமா மற்றும் கொண்டாட்டங்களைத் தாண்டி ரசிகர்கள் இயக்கத்தை சமூக நலனுக்கான முயற்சியாக மாற்றும் வகையில், ’ஐகான் ஸ்டார்’ அல்லு...

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது!

ஸ்மார்ட்டான உள்ளடக்கத் தேடலுடன், மேலும் வளமான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் வகையில், Zee 5 தனது மறுவடிவமைக்கப்பட்ட தயாரிப்பு...

விநோத உலகத்தை  அறிமுகப்படுத்தும் ‘ட்ரோன்ஸ்’ படத்தின் மிரட்டலான 3 ஃபர்ஸ்ட் லுக், குவியும் வரவேற்பு!

GM Morgan Films நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் ஆர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி வரும் வித்தியாசமான சர்ரியலிஸ்ட்...

More like this