HomeCinemaஇயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனின் ஒன்ட்ராக ஒரிஜினல்ஸின் அடுத்தப் படைப்பாக உருவான ‘ராசாத்தி'யின் அசத்தல் ஃபர்ஸ்ட்...

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனின் ஒன்ட்ராக ஒரிஜினல்ஸின் அடுத்தப் படைப்பாக உருவான ‘ராசாத்தி’யின் அசத்தல் ஃபர்ஸ்ட் லுக்!

Published on

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனின் ஒன்ட்ராக என்டர்டெயின்மென்ட் புதிய திறமையாளர்களை ஊக்குவித்து ஆதரவளிக்கும் விதமாக அவர்களுடன் இணைந்து பல இசை ஆல்பங்களை உருவாக்கி வருகிறது. ஒரு ஊரில் ஒரு ஃபிலிம் ஹவுஸ் உடன் இணைந்து ஒன்ட்ராக என்டர்டெயின்மென்ட் திரைப்படங்கள், உயர்தர இசை வீடியோக்கள், குறும்படங்கள் மற்றும் பிற ஒரிஜினல் கண்டெண்ட்களைத் தயாரித்து வருகிறது. நம் வழக்கமான பாரம்பரிய சினிமாவிற்கு அப்பாற்பட்டு பலதரப்பட்ட பார்வையாளர்களின் பாராட்டுகளையும் இது பெற்று வருகிறது.

டோவினோ தாமஸ் மற்றும் திவ்யதர்ஷினி நடித்த ’உலவிரவு’, அதர்வா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ’போதை கோதை’, நடன இயக்குநர் சதீஷ் நடித்த ’கூவா’ என ஒன்ட்ராக எண்டர்டெயின்மெண்டின் புகழ்பெற்ற இவை அனைத்தையும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருக்க, கார்த்திக் இசையமைத்திருக்கிறார். இவை அல்லாமல், கெளதம் மேனன் இசையமைத்து நடித்த ‘முத்த பிச்ச’ மற்றும் டீஜே-யின் ‘எரிமலையின் மகளே’ போன்றவற்றையும் குறிப்பிட்டு சொல்லலாம்.

இவற்றை அடுத்து ஒன்ட்ராக ஒரிஜினல்ஸின் அடுத்தப் படைப்பு ‘ராசாத்தி’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் கெளஷிக் சுந்தரம், வைபவ் டான்டில் நடித்திருக்க ‘ஓ பேபிகேர்ள்’, ‘பொண்டாட்டி நீ’ புகழ் அச்சு ராஜாமணி இசையமைத்திருக்கிறார். இதன் புரோமோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மியூசிக் வீடியோ ஜூலை 24, 2024 அன்று வெளியிடப்பட உள்ளது.

ஆல்பத்தை ஆதவ் சரண் கண்ணதாசன் இயக்கி இருக்கிறார் மற்றும் ஆர்ட்வென்ச்சர் பிலிம்ஸ் மற்றும் பிளாஷ்பேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

ஒன்ட்ராக ஒரிஜினல்ஸ், ஒரிஜினல் மற்றும் சுயாதீன இசைக்கான அவர்களின் பிரிவு, அதன் புதுமையான மற்றும் ஈர்க்கக்கூடிய கதைசொல்லலுக்கு பெயர் பெற்றது. இதைத்தாண்டி அடிக்கடி புது தீம் மற்றும் ஜானர்களையும் அது முயற்சி செய்து பார்த்து வருகிறது. புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள் மற்றும் புது இசைக்கலைஞர்களுடன் இணைந்து மறக்கமுடியாத ஒலிப்பதிவுகளை உருவாக்கி வருகிறது.

Latest articles

கின்னஸ் சாதனை படைத்த அட்லியின் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ராக்கா!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குநர் வி. அருண்குமார் (எ) அட்லீ இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின்...

மஹாவீர் கர்ணனாக ராகவா லாரன்ஸ் நடிக்க, ரமேஷ் வர்மா இயக்கத்தில் ஐந்து மொழிகளில் உருவாகிறது ‘மஹாவீர் கர்ணா.’

பென் மூவீஸ் ஜெயந்திலால் கடா வழங்க, ஆர்வி ஸ்டூடியோஸ் - ஸ்ரீ நீலாத்ரி புரொடக்‌ஷன்ஸ்  இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாகத்...

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி  இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார்...

அர்ஜித் சங்கர் – க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் ‘நான் அவனில்லை’ ஜீவன்!

‘காக்க காக்க’ திரைப்படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாகவும், ‘நான் அவனில்லை’ திரைப்படத்தில் கிரே ஷேட் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த...

More like this